For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொரில்லா ஜெயில்.. உன் கூட உள்ள அனுப்பி என்னை டார்ச்சர் பண்றாங்கப்பா.. சுச்சியிடம் எகிறிய பாலா!

  |

  சென்னை: சுசித்ரா கூட சேர்ந்து எல்லோரையும் கலாய்த்து பாடிக்கிட்டு இருந்த பாலா குரூபிசம் சர்ச்சையை கிளப்ப, நீங்களும் தான் குரூப் வச்சிருக்கீங்க என சுசித்ரா பாலாவுக்கு பொளேர் விடும் அசத்தலான இரண்டாவது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

  பாலாஜி முருகதாஸையும், சுசித்ராவையும் முதல் புரமோவில் கண்ணாடி ரூமுக்குள் அடைத்த நிலையில், தற்போது இரண்டாவது புரமோ வெளியாகி உள்ளது.

  அதில், பாலாவுக்கும் சுச்சிக்கும் இடையே ஏற்படும் சண்டை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

  இதை.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. பாலாவை புடிச்சு ஜெயில்ல போட்ட பிக் பாஸ்.. உருப்படியான புரமோ!

  கோல்மால் பாலா

  கோல்மால் பாலா

  மணிக்கூண்டு டாஸ்க்கில் ஏமாற்றி பிழைத்த பாலாவால், அந்த அணிக்கு குறைவான லக்சரி பாயின்ட்டுகளே கிடைத்தன. மற்ற அணிகள் வெயிலிலும் மழையிலும், நள்ளிரவிலும் கடுமையாக போராடி, சரியாக நேரத்தை துல்லியமாக கணித்த நிலையில், பாலா கோல்மால் ஆடி ஜெயிக்க பார்த்து தோற்றார்.

  முதல் புரமோ

  முதல் புரமோ

  இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் ஹவுஸ்மேட்கள் பிக் பாஸ் உத்தரவு பேரில் பாலாவையும் சுசித்ராவையும் கண்ணாடி சிறைக்குள் வைத்து பூட்டுகின்றனர். நேற்று தான் இது தொடர்பாக சனம் ஷெட்டிக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

  கிண்டல் பண்ண சனம்

  கிண்டல் பண்ண சனம்

  என்ன ஜெயிலுக்கு போக சொன்ன, இப்போ நீ எங்கப்பா இருக்க தம்பி என கிண்டல் பண்ணும் விதமாக சனம் ஷெட்டி பாலாவை உள்ளே வந்து வெறுப்பேற்றுகிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஷிவானியை இனிமே மடியில சாய்த்துக் கொண்டு கதை பேச முடியாது என்றும் ரசிகர்கள் கிண்டல் பண்ணி வருகின்றனர்.

  சுச்சிக்கூட சேர்ந்து

  சுச்சிக்கூட சேர்ந்து

  இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவில், சுசித்ராவுடன் சேர்ந்து கொண்டு வழக்கம் போல, ரயிலை தள்ளினேன், ஜெம்ஸ் மிட்டாய் சாப்பிட்டேன். ஆனாலும், ஜெயில்ல புடிச்சி போட்டுட்டாங்க, எல்லாரும் ஒரு குரூப்பு, அந்த குரூப்புக்கு பிக் பாஸ் தான் தலைவர் என்கிற ரேஞ்சுக்கு பாடிக் கொண்டு இருக்கிறார் பாலா.

  மீண்டும் குரூபிசம் பஞ்சாயத்து

  மீண்டும் குரூபிசம் பஞ்சாயத்து

  ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சனாவை குரூப் தலைவி என்றும் ரியோ ராஜ், நிஷா, சோமசேகர், ரம்யா பாண்டியன், அனிதா சம்பத் எல்லாம் அவங்க குரூப் என்றும் கொடி பிடித்து வந்த பாலா, இடையே சம்யுக்தாவை வைத்துக் கொண்டு ஒரு குட்டி குரூப்பை உருவாக்கினார். ஜெயிலுக்குள் சென்ற கடுப்பில் மீண்டும் குரூபிசம் பஞ்சாயத்தை கிளப்புகிறார்.

  செருப்படி கொடுத்த சுச்சி

  செருப்படி கொடுத்த சுச்சி

  நீங்களும் தான் ஒரு குரூப்ப உருவாக்கினீங்க என சுச்சி திடீரென பாலாவை பார்த்து கேள்வி எழுப்பி சரியான செருப்படி கொடுத்தார். அதற்கு உடனே, ஆஜீத், கேபி என் பேச்சை கேட்பதே இல்லை. ஷிவானி புடிக்கலைன்னா மூஞ்சிக்கு நேராக திட்டிட்டு போயிடுவா, நான் எந்த குரூப்லையும் இல்லை என பம்மினார்.

  பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
  உன் கூட அனுப்பிட்டாங்களே

  உன் கூட அனுப்பிட்டாங்களே

  திடீரென டென்ஷன் ஆன பாலாஜி முருகதாஸ், உன் கூட உள்ள அனுப்பி என்னை சாவடிக்கிறாங்களே என கத்தும் காரசாரமான இரண்டாவது புரமோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இன்னைக்கு நிச்சயம் தரமான பல சம்பவங்கள் காத்திருக்கின்றன. புரமோவே இப்படி வெடிக்குதுன்னா நிகழ்ச்சி இன்னும் சிறப்பா இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil 4 Day 47 second promo reveals Balaji Murugadoss got angry over Suchitra in glass jail.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X