தானா ஆரிக்கு போன அதிக பாயின்ட்.. பாலா பண்ண அந்த விஷயம்.. என்ன நினைச்சு அப்படி செஞ்சிருப்பாரு?

சென்னை: ஹவுஸ்மேட்கள் அனைவரும் சேர்ந்து ஆரிக்கு கடைசி இடத்தை வழங்கிய நிலையில், பாலாவின் கைகள் தானாக ஆரிக்கு அதிக புள்ளிகளை வழங்கிய நிகழ்வு நடந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இறுதி வாரத்துக்கு ஆரி வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

வஞ்சக எண்ணம்

வஞ்சக எண்ணம்

பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், ரம்யா மற்றும் மற்ற ஹவுஸ்மேட்கள் டைட்டில் வின் பண்ணக் கூடாது என ஆரி ஒரு போதும் வஞ்சக எண்ணம் கொண்டதில்லை என்பது தொடர்ச்சியாக நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியும் என பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சக போட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ள ஓட்டு

கள்ள ஓட்டு

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் கள்ள ஓட்டுக்கள் மட்டுமே போடப்படுகின்றன. ஓட்டுப் போடுவதிலும் ஃபேவரிஸம் மற்றும் குரூப்பிசம் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆனால், இதையெல்லாம் கமல் தட்டிக் கேட்பதே இல்லை. மாறாக அதை செய்பவர்களை தட்டிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.

வீணாகும் கமல் பேச்சு

வீணாகும் கமல் பேச்சு

போட்டியாளர்களுக்கு இதுவரை கமல் அட்வைஸாக சொல்லாமல் டிப்பாக கொடுக்கும் எந்தவொரு விஷயத்தையும் யாரும் செவி சாய்த்து கேட்பதே இல்லை. ஆரிக்கு சாதகமாகவே கமல் பேசுகிறார் என்கிற தோரணையுடன் தான் வார வாரம் பாலாவும், ரம்யாவும் கமலுக்கு முன்பாகவே ஆட்டிடியூட் காட்டி வருகின்றனர்.

கார்னர் பண்றாங்க

கார்னர் பண்றாங்க

ஆரி இந்த வீட்டில் ஒவ்வொருவரையும் கார்னர் பண்றாங்க என அனைவரும் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். ஒரு மனிதன் அத்தனை பேரையும் கார்னர் பண்ணுகிறாரா? இல்லை நாம் தான் அவரை கார்னர் பண்ணுகிறோமா என்பதை யாருமே இதுவரை உணர்ந்ததாக தெரியவில்லை. தொடர்ந்து போரிங் என ஆரியை நாமினேட் செய்ததன் விளைவாகவே, நீங்க ஆடுற குரூபிச கேமை போட்டு உடைக்கிறேன் என ஆரி கிளம்பியதை சோமும் மறந்து விட்டார்.

ஆரிக்கு அதிக புள்ளிகள்

ஆரிக்கு அதிக புள்ளிகள்

ஆரிக்கு கடைசி இடத்தை குறை சொல்லும் டாஸ்க்கில் ஹவுஸ்மேட்கள் கொடுத்த நிலையில், பாலாவின் கை தானாக, ஆரிக்கு 7 புள்ளிகளை கொடுத்திருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியான ரியோ, யாருடா ஆரிக்கு இவ்ளோ பாயின்ட்ஸ் கொடுத்தது எனக் கூறி ஆரிக்கு ஒரு புள்ளியை அந்த இடத்தில் மாற்றி வைத்தார்.

பாலாவின் நோக்கம் என்ன

பாலாவின் நோக்கம் என்ன

ஆரிக்குத்தான் இந்த சுற்றில் அதிக புள்ளிகள் கொடுக்க வேண்டும் என நினைத்து பாலா அப்படி செய்தாரா? இல்லை ஆரி தான் கடைசி என்று நினைத்தே பாலாஜி முருகதாஸ் 7 வது இடம் என்கிற கடைசி நம்பரை ஆரிக்கு முதல் எடுத்தவுடன் வைத்திருக்க வாய்ப்பு இருக்கு என்றும் ஒன்றுக்கும் ஏழுக்கும் வித்தியாசம் தெரியாத பாலா என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் பாலாவை கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X