அடுத்த வாரத்திற்கான தலைவர் டாஸ்க்.. பாலாஜி பண்ண ஃபிராடு தனம்.. ஜெயிச்சது யார் தெரியுமா?

சென்னை: தங்க வேட்டை டாஸ்க்கே சுவாரஸ்யம் இல்லாமத் தான் இருந்தது. அதில், சுவாரஸ்யமா யார் பண்ணது என கேட்டவுடன், அதிக தங்கத்தை வைத்துக் கொண்டு, 7 பேர் உள்ள அணியில் நைஸா போய் சேர்ந்து கொண்ட பாலாஜி தான்னு எல்லாரும் அவரை பிக் பாஸ் வீட்டின் ஹீரோவாக ஆக்க பார்க்கின்றனர்.

Recommended Video

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நடந்த இன்ட்ரஸ்ட்டிங் சம்பவங்கள் | டாப் ஃபைவ் பீட்ஸ் - வீடியோ

கண்டிப்பா பாலாஜி தான் பா அடுத்த வார தலைவர் என போன வாரம் நினைத்தது போலவே ரசிகர்கள் நினைக்க, கடைசியில் ஒரு செம ட்விஸ்ட் வச்சிட்டார் பிக் பாஸ்.

அதுவும் பாலாஜி முருகதாஸ் பண்ண ஃபிராடு தனத்தால் தான் என்பது தான் ஹைலைட்.

சுவாரஸ்யமானவர்கள்

சுவாரஸ்யமானவர்கள்

தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் டாஸ்க்கில் சுவாரஸ்யமாக விளையாடியது யார் என பிக் பாஸ் கேட்க, ஹவுஸ்மேட்ஸ், பாலாஜி மற்றும் நிஷாவின் பெயரை பரிந்துரைத்தனர். மொட்டை தாத்தா இந்த வாட்டி பாலாஜி மேல இருக்க கடுப்பை நல்லாவே வெளிக்காட்டி நிஷாவுக்கு ஓட்டுப் போட்டார்.

ஆல்ரவுண்டர் சோம்

ஆல்ரவுண்டர் சோம்

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆல் ரவுண்டராக கலக்கியது சோமசேகர் தான் என எதை வைத்து சொன்னாங்கன்னு யாருக்குமே தெரியல, ஆனால், அந்த பட்டத்தை சோமசேகருக்கு கொடுத்துட்டாங்க, ஆக்சுவலா அர்ச்சனா அக்காவுக்குத் தான் கொடுத்திருக்கணும். ஜஸ்ட் மிஸ்!

ரம்யாவுக்கு அல்வா

ரம்யாவுக்கு அல்வா

பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்த ரம்யா பாண்டியனுக்கு பெரிய கிஃப்ட் தருவாருன்னு பார்த்தா, அடுத்த வார தலைவருக்கான போட்டியில் இருக்கும் பாலா, நிஷா, சோம் இவர்கள் மூவரில் யாரையாவது ஒருவரையோ, அல்லது இருவரையோ மாற்றலாம் என அல்வா கொடுத்து ஏமாற்றி விட்டார்.

இவருக்கு பதில் இவர்

இவருக்கு பதில் இவர்

சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என போடுவது போல ரம்யா பாண்டியன், நிஷாவுக்கு கிடைத்த இடத்தை பறித்து விட்டு, சம்யுக்தாவுக்கு கொடுத்தார். பாலாஜி மேல இவருக்கு ஒரு ஃபீலிங் இருக்கத்தான் செய்யுது. பாவம் ஷிவானி முந்திக்கொண்டார். பாலாவையும், சோமையும் அப்படியே விட்டு விட்டு தனக்கு கிடைத்த வரத்தை ரம்யா பயன்படுத்தினார்.

பந்து பொறுக்கணும்

பந்து பொறுக்கணும்

பாலாஜி, சம்யுக்தா, சோமசேகர் என நல்லா விளையாட கூடிய பிளேயர்களை வைத்துக் கொண்டு பந்து பொறுக்கணும் என மொக்கை பிசிக்கல் டாஸ்க்கை வழக்கம் போல் பிக் பாஸ் கொடுத்த போது, நிச்சயம் இதில் பாலா தான் ஜெயிக்கப் போறாரு, அவர் தான் அடுத்த வாரம் கேப்டனாக போறாரு என எல்லாருமே நினைப்பாங்க, கடைசியில் ட்விஸ்ட் வச்சிக்கலாம் என பிக் பாஸ் அட்டு பிளான் போட்டு இருந்தார்.

யார் தலைவர்

யார் தலைவர்

இந்த போட்டிக்கு விதிகள் கிடையாது என்ன வேணா செய்யலாமென பிக் பாஸ் ஏத்தி விட்டதும், அதை மட்டும் உள்வாங்கிக் கொண்ட பாலா, சோமசேகரை ஜெயிக்க விடாமல், தன்னுடைய பந்துகளையும் சேர்த்து சம்யுக்தாவுக்கு கொடுத்து அவரை பிக் பாஸ் சொன்ன ஃபிராடு தனத்தை பயன்படுத்தி ஜெயிக்க வைத்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X