பாத்ரூம் டோரை அடித்து உடைத்த பாலா.. கையில் ஆணிக் குத்தி.. ரத்தமே வந்துடுச்சு.. தவித்து போன ஷிவானி!

சென்னை: சுசித்ராவின் தொல்லை கண்ணாடி அறைக்குள் வந்தும் விடவில்லையே என புலம்பி தவித்து வந்த பாலா, ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல், பாத்ரூம் டோரை அடித்து உடைத்து கத்த ஆரம்பித்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் பாலாவின் கதறலை கேட்டு யாருமே எட்டிக் கூட பார்க்கவில்லை.

ஆனால், தன்னுடைய லவ்வருக்கு மன்னிக்கனும் அண்ணனுக்கு என்னாச்சோ.. ஏதாச்சோ என பதறி துடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தார் தங்கை ஷிவானி.

கத்த மட்டும் தான் தெரியும்

கத்த மட்டும் தான் தெரியும்

பிக் பாஸ் தமிழ் 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டா பாலாஜி முருகதாஸுக்கு கத்த மட்டும் தான் தெரியும் என்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு நல்லாவே தெரிந்து விட்டது. வாயை மட்டும் வச்சிட்டு விளையாட வந்துட்டீங்க என ஆரியிடம் எகிறிய பாலா, எப்போதுமே வாய் சண்டை வீரராகவே இருப்பது செம வேடிக்கை.

துடைத்துப் போடும் சுச்சி

துடைத்துப் போடும் சுச்சி

பாலா என்ன தான் அசிங்கமாக திட்னாலும், கண்டபடி கத்தினாலும், கொஞ்சம் கூட வெட்கம், மானம் ரோஷம் சூடு, சொறணை என எதுவுமே இல்லாத மாதிரி, நாம பாட்டுப் பாடலாம் பாலா என டாப்பிக்கை மாற்றியதை பார்த்த ரசிகர்கள், அப்படியே எல்லாத்தையும் துடைத்துப் போட்டு விளையாடுதே இதல்லவோ ஸ்போர்ட்டிவ் ஆன போட்டியாளர் என கொண்டாட ஆரம்பித்து விட்ட்னர்.

பாலாவுக்கு நல்லா தேவை

பாலாவுக்கு நல்லா தேவை

மத்தவங்கள மதிக்காம கிண்டல் பண்ணிட்டு, தான் தான் ராஜான்னு ஜகமே தந்திரம் பாட்டை பாடிட்டு சுத்திட்டு திரிந்த பாலாவுக்கு இது நல்லா தேவை என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். ரகிட ரகிட ரகிட பாடிட்டா நீயெல்லாம் தனுஷா ஆகிட முடியாது பயில்வான் என்றும் ட்ரோல்கள் குவிகின்றன.

பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டு

பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டு

சுச்சியிடம் பேசி ஜெயிக்க முடியாததை தெரிந்து கொண்ட பாலாஜி முருகதாஸ், அப்படியே எஸ்கேப் ஆகி பாத்ரூமுக்குள் போய் ஒளிந்து கொண்டார். அந்த நேரம் பார்த்து, பச்சைக்கிளி ஷிவானியும் சம்யுக்தாவும் வர, இந்தா வந்துட்டாங்க பாரு உன் குரூப் என மீண்டும் சூடேற்றினார் சுச்சி.

பாத்ரூம் டோரை அடித்த பாலா

பாத்ரூம் டோரை அடித்த பாலா

மறுபடியும் ஷிவானி பாலா மாமாவை பிரிந்து இருக்க முடியாமல் அவரை பார்க்க வந்தது பொறுக்க முடியாமல் சுச்சி, பாலாவை உசுப்பி விட, மீண்டும் குரூபிசம் வார்த்தையை கேட்ட பாலா, பாத்ரூமுக்குள் இருந்த படியே டோரை அடித்து கிங் காங் பட கொரில்லா மாதிரியே கத்தினார். ஷிவானியை தவிர ஒருவரும் அந்த கத்தலுக்கு செவி சாய்க்கவே இல்லை.

கையில் ரத்தம்

கையில் ரத்தம்

பிக் பாஸ் வீட்டில் இப்படித்தான் ஒவ்வொரு சீசனிலும், கேரட் கட் பண்ணும் போதும், பாத்ரூம் க்ளீன் பண்ணும் போதும் ஏன், சொரியும் போது கூட கைகளில் ரத்தம் வந்து விடும். அப்படி நல்லா நடிப்பாங்க, அதே போலத்தான் வெளியே வந்த பாலா, வெறும் துண்டை கட்டிக் கொண்டு சுச்சியிடம் பாத்ரூம் டோரை அடித்து உடைத்து கையில் ரத்தம் வந்துடுச்சுன்னு வாயாலே வடை சுட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X