என்ன ஒரு ஆனந்தம்.. ஷிவானி சேவ் ஆனதும், அப்படியே கட்டிப்பிடித்து குஷியான பாலா.. முதல்ல பயந்தாரு!
சென்னை: இந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறிய நிலையில், ஷிவானி நாராயணன் சேவ் ஆகிட்டார் என்ற சந்தோஷத்தை அவரை கட்டிப்பிடித்து கொண்டாடினார் பாலாஜி முருகதாஸ்.
முன்னதாக, அர்ச்சனா மற்றும் ஷிவானியிடம் தனது பயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.
ஷிவானி நாராயணன், அனிதா போல எல்லாம் பயந்து நடுங்கி, அழுது புலம்பவில்லை.

மூவரில் ஒருவர்
சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஆரி மற்றும் ரம்யா பாண்டியன் சேவ் செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் நிஷா மற்றும் ஆஜீத் முன்னதாக சேவ் ஆனார்கள். அதனை தொடர்ந்து சனம் ஷெட்டி, அனிதா சம்பத் மற்றும் ஷிவானி ஆகிய மூவரில் ஒருவர் வெளியேறுவது உறுதியானது.

பாலாவுக்கு பயம்
ஷிவானி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார் என்கிற பயம் பாலாவுக்கு தொற்றிக் கொண்டது. அர்ச்சனா அக்காவிடம் இது பற்றி பேசி புலம்பிய பாலா, ஷிவானி ஒண்ணுமே இதுவரைக்கும் இந்த வீட்டில் பண்ணல என்பதை ஓப்பனாக ஒப்புக் கொண்டார். எனக்கு நம்பிக்கை இருக்கு ஷிவானி போக மாட்டார் என அர்ச்சனா பாலாவுக்கு ஆறுதல் சொன்னார்.

பிடிச்சவங்களாம் போறாங்க
அர்ச்சனாவை தொடர்ந்து ஷிவானியிடம் பேசிய பாலா, தன்னுடன் பேசுறவங்களும் தனக்கு பிடிச்சவங்களுமாவே இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுறாங்க, சுரேஷ் தாத்தா, சுசித்ரா, சம்யுக்தா என லிஸ்ட் போட்டார். அப்போ அடுத்தது நான் தான் என ஷிவானி பாலாவை இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றினார்.

கட்டிப்பிடித்து கொஞ்சல்
கடைசியில், சனம் ஷெட்டி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்பது தெரிந்த உடன், ரொம்பவே சந்தோஷப்பட்டது பாலா தான். ஒரே கல்லில் இரு மாங்காய் என்பது போல சண்டைக்கோழி சனம்க்கு பாய் சொல்லி விட்டு, பச்சைக் கிளி ஷிவானி நாராயணனை கட்டிப்பிடித்து பாத்ரூம் ஏரியாவில் கொஞ்சினார் பாலா.

கண்டும் காணாமல்
ஏற்கனவே ஷிவானியை பாலா மாமா.. பாலா மாமா என பின்னாடி சுத்துறாங்கன்னு சம்யுக்தா, ஆஜீத், அனிதாவிடம் பேசி கலாய்த்து வரும் ரம்யா பாண்டியன், இப்பவும் கையும் களவுமாக ரெண்டு பேரும் பாத்ரூம் ஏரியாவில் கட்டிப்பிடித்து கொஞ்சியதை கண்டும் காணாமல் பார்த்து விட்டு நகர்ந்து சென்றார். நிச்சயம் ஆஜீத்திடம் இது பற்றி பேசுவார் என்றே தெரிகிறது. எப்படி இருந்தாலும், பாலாவுக்கு ஷிவானி சேவ் ஆனது, சனம் வெளியேறியது என இந்த வாரம் டபுள் சந்தோஷம்.


Click it and Unblock the Notifications











