புல் தடுக்கி பயில்வான்.. ஷிவானியை பிளேம் பண்ண பாலா.. செம சண்டை.. ஷிவானி இந்த வாரமும் சேவ் தான்!
சென்னை: ஷிவானி தள்ளி விட்டு விழுகிற அளவுக்குத் தான் பயில்வான் பாலா இருக்கிறார் என்பது வேடிக்கையான விஷயம் தான்.
பந்தை தவறவிட்டு விட்டு, பிடிக்க முயற்சிக்கும் போது கீழே விழுந்த பாலா, உடனே ஷிவானி மேல அந்த பழியை போட்டுவிட்டார்.
இதுக்கு மேல பாலாவுக்கு அடிமையா இருக்க முடியாது என எண்ணிய ஷிவானி முதல் முறையாக அவரை எதிர்த்து கோபப்பட்டுள்ளார்.

புல் தடுக்கி பயில்வான்
புல் தடுக்கி பயில்வான் என்கிற வாசகம் அப்படியே ஆப்டா பொருந்துவது நம்ம பயில்வான் பாலாவுக்குத்தான். பந்தை சரியாக பிடிக்க முடியாமல் சட்டென புல் தரையில் தடுக்கி விழுந்து விடுகிறார். இதனால் சமூக வலைதளத்தில் பாலாவை புல் தடுக்கி பயில்வான் என புதிய பட்டப்பெயரை வைத்து அழைத்து வருகின்றனர்.

ஷிவானியுடன் சண்டை
காதலர்களாக மாறுவார்கள் ஷிவானியும் பாலாவும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அண்ணன் தங்கை உறவு என்றார்கள், அன்பு என்றார்கள் ஆனால், இப்போ ஷிவானியையே பாலா தாக்கி பேசி இருவரும் எதிரிகளாக மாறிவிடுவார்களோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஷிவானி விடவில்லை
ஷிவானி தான் தன்னை தள்ளி விட்டார் என பாலாஜி முருகதாஸ் சொன்னதும் ஷிவானிக்கு ரொம்பவே கடுப்பாகி விட்டது. பாலாவுக்கு எதிராக முதல் முறையாக பொங்கி எழுந்து சண்டை போட ஆரம்பித்தார் ஷிவானி. இதற்குத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம் என பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

விளையாட்டை கெடுத்துட்டீங்க
ஒரு விளையாட்டை குரூப்பா சேர்ந்து ஜெயிக்க வைக்க வேண்டும், ஆனால், சிலர் இங்க நம்மை தோற்கடிக்க பார்க்கிறாங்க என பாலா பேசியதும் மேலும், கடுப்பான ஷிவானி பாலாவின் பழியை ஏற்றுக் கொள்ளாமல் அவருக்கு எதிராக எதிர்த்து பேசி விளாச ஆரம்பித்து விட்டார். ஆரி உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் ஷிவானிக்கு ஆதரவாக பேசி அந்த பிரச்சனையை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.

கண்ணீர் விட்ட ஷிவானி
பாலாவை வெளுத்து வாங்கி வந்த ஷிவானி நாராயணன், கடைசியில் சட்டென பாலாவே நம் மீது பழி போட்டு விட்டாரே என நினைத்த இடத்தில் ஷிவானி அழுததை ரசிகர்கள் யாரும் விரும்பவில்லை. தைரியமாகவே சண்டை போடுங்க 2 மில்லியன் ரசிகர்கள் பக்க பலமாக இருக்கின்றனர்.

கமலுக்கு இது போதும்
பாலாவிடம் அப்படி தில்லாக எதிர்த்து பேசிய ஷிவானியை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே பாராட்ட ஆரம்பித்து விட்டனர். இது போதும், கமல் சார் இந்த வாரம் ஷிவானியை சேவ் பண்ண காரணம் கிடைத்து விட்டது என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











