twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆரியாக மாறிய பாலா.. இருக்குற காண்டெல்லாம் நடிச்சு தள்ளிட்டாரு.. இதுதான் கொளுத்திப் போடுறது!

    |

    சென்னை: அடுத்த வாரத்திற்கான சண்டையை மூட்டி விடும் வேலையை கமலை வைத்தே இம்முறை பிக் பாஸ் கொளுத்திப் போட்டு விட்டார்.

    எவிக்‌ஷனுக்கு முன்னாடி ஒரு கேம் விளையாடலாமா எனக் கூறிய கமல், சில போட்டோக்களை வைத்து, யாருக்கு என்ன போட்டோ வருகிறதோ அவர்களை போல இமிடேட் செய்ய வேண்டும் என பணித்தார்.

    முதல் ஆளாக வந்த பாலாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல ஆரியின் போட்டோ கிடைக்க நல்லாவே வச்சு செய்தார்.

    அர்ச்சனா மட்டும் இல்லை பாலாவும் தான்.. கிடைத்த கேப்பில் கிடா வெட்டிய சனம்.. கைதட்டிய ரியோ!அர்ச்சனா மட்டும் இல்லை பாலாவும் தான்.. கிடைத்த கேப்பில் கிடா வெட்டிய சனம்.. கைதட்டிய ரியோ!

    எவிக்‌ஷனுக்கு முன்னாடி

    எவிக்‌ஷனுக்கு முன்னாடி

    வேல்முருகன் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே போகிறார் என்பது இரண்டு நாட்களுக்கு முன்னரே தெரிந்த போன நிலையில், எவிக்‌ஷனுக்கு முன்னாடியாவது நிகழ்ச்சியை சுவாரஸ்யம் ஆக்க வேண்டுமே என ஒரு இமிடேஷன் கேமை கமல் நடத்தினார். போட்டோவில் வரும் நபர் போல நடித்துக் காட்ட வேண்டும் என்பது தான் கேம்.

    முந்திரிக்கொட்டை பாலா

    முந்திரிக்கொட்டை பாலா

    ஓரமாய் ஒளிந்து கொண்டு மிக்சர் சாப்பிடாமல், எல்லா விஷயத்திலும் முதல் ஆளாக முந்தி வரும் பாலாவை முந்திரிக்கொட்டை என கிண்டல் பண்ணவே கூடாது. அது ஸ்போர்ட்டிவ் என்று தான் சொல்ல வேண்டும். முதல் ஆளாக வந்த பாலாவுக்கு கிடைத்த போட்டோ ஆரியின் போட்டோ. ஆனால், இதை நாங்கள் ஸ்க்ரிப்ட் என்று சொல்ல மாட்டோம்.

    வெளியே போய் பார்த்தா புரியும்

    வெளியே போய் பார்த்தா புரியும்

    ஆரி இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்கிற குணாதிசயத்திற்காக நடிக்க சொன்னால், அப்போதும் ஆரியின் மீது இருக்கும் வெறுப்பையே உமிழ்ந்து பாலா நடித்து இருந்தார். சம்பந்தம் இல்லாமல் பேசுவேன். நிறைய பேசுவேன். பேசுனாதான் சோறு கிடைக்கும். ஓட்டும் கிடைக்கும். நான் விளையாடுற கேம் உங்களுக்கு இங்கே பார்த்தா புரியாது. வெளியே இருந்து பார்த்தா புரியும் என்றார். அர்ச்சனா அக்கா ஆமாம் சாமி ரியாக்‌ஷன் கொடுத்தாங்க!

    ஏன் போகணும்னா

    ஏன் போகணும்னா

    ஆரி இந்த வீட்டில் இருந்து ஏன் போக வேண்டும் என அவரை போல இமிடேட் பண்ணி காட்ட சொல்லும் போது கூட பாலா, தனது விஷத்தையே கக்கினார். மத்த ஹவுஸ்மேட்களோட மனநிலையை புரிஞ்சு என்னால இங்கே விளையாட முடியல, நான் அதிகமா பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல, ஆனால், கடைசியா பேசுறேன் என்பதால, சொல்ல வந்த பாயிண்ட்களை பேசிடுறேன் என ஆரி மொக்கை போடுகிறார் என்பதை நடித்துக் காட்டினார்.

    பருப்பு வேகாது

    பருப்பு வேகாது

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி ஆரி போல இமிடேட் செய்ததை பார்த்த ரசிகர்கள், ஆரி மாதிரி நடிக்க சொல்லியும், உனக்குள்ள நல்ல குணம் ஏதும் வரலயே பாலாஜி, உன் பருப்பு இங்கே வேகாது என திட்டத் தொடங்கி விட்டனர். மனதில் இருக்கும் வெறுப்புகளை உமிழ பிக் பாஸ் போட்ட நாரதர் திட்டம் நல்லாவே வேலை செய்தது.

    English summary
    Balaji Murugadoss imitated like Aari in Bigg Boss house before the eviction process. He trolls Aari while he act like Aari in the task.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X