7 கல் விளையாட்டு.. பிக் பாஸ் வீட்டு நீச்சல் குளத்தில் விழுந்த பாலாஜி.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: விஜயதசமி ஸ்பெஷல் பிக் பாஸ் நிகழ்ச்சி கலவை சாதமாக அறு சுவைகளுடனும் களை கட்டியது.

கிராமத்தில் பொங்கல் நிகழ்ச்சிகள் நடக்கும் போது நடைபெறும் விளையாட்டுக்களை எல்லாம் விஜயதசமி கொண்டாட்டத்தில் வைத்து அசத்தி விட்டனர்.

பாட்டு, பேச்சு, டான்ஸ் என சென்ற பிக் பாஸ் வீட்டில், பிசிக்கல் டாஸ்க் போல ஓடி புடிச்சி விளையாட செவன் ஸ்டோன் எனப்படும் 7 கல் விளையாட்டு வைத்தது செம சூப்பர்.

கிராமம் vs நகரம்

கிராமம் vs நகரம்

சமையல் முதல் இரவு நடந்த அந்தாக்‌ஷரி கேம் வரை கிராமம் vs நகரம் என இரு அணிகளாக ஹவுஸ்மேட்கள் பிரிந்து விஜயதசமி பண்டிகையை கொண்டாடினார்கள். ஜாலி, கேலி, கிண்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என 4 மணி நேரமும் சென்றது. கடைசியில் வழக்கம் போல அனிதாவுக்கும் மொட்டை தாத்தாவுக்கும் சண்டை உடன் மறுபடியும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது.

பாயசத்துல மண்

பாயசத்துல மண்

சமையல் போட்டியில் கிராமத்து டீமை தோற்கடித்து விட்டு, நகரத்து டீம் ஜெயித்தது. சனம் ஷெட்டி, பாலாஜி செஞ்ச பாயாசம் தான் சூப்பர் என அனிதா சம்பத் அறிவித்தார். உடனே மொட்டை தல சுரேஷ், பாயாசத்துல மண் இருக்கு, முடி இருக்குன்னு நடுவர் அனிதாவின் தீர்ப்பை அப்போதே நோஸ் கட் பண்ண ஆரம்பித்து, நைட் வரை பிரச்சனை பெரிதாக்கினார்.

7 கல் விளையாட்டு

7 கல் விளையாட்டு

அதன் பிறகு, கிராமம் vs நகரம் அணியினர் 7 கல் விளையாட்டை விளையாடினார்கள். நல்ல ஸ்டம்பர் பால் இருந்திருந்தா, ஒருத்தர் ஒருத்தர் முதுகு பழுத்து, மண்டை உடைந்து சண்டை ஆரம்பித்து இருக்கும். ஸ்மைலி பந்தை கொடுத்து விட்டு, பேருக்குன்னு வெறும் கூச்சலும், கத்தலுமாகவே அந்த கேமை விளையாடினார்கள்.

மான் போல துள்ளி குதித்து

மான் போல துள்ளி குதித்து

அந்த பால் பட்டு வலித்து விடக் கூடாது என ஷிவானி நாராயணன் மான் போல துள்ளி குதித்து ஓடி ஆடி விளையாடியதை பார்த்த ரசிகர்கள், செல்லத்துக்கு இந்த மாதிரியே பிசிக்கல் கேம் கொடுங்க, சும்மா லொட லொடன்னு பேசுறதுக்குத் தான் அனிதா, அர்ச்சனா, நிஷான்னு ஏகப்பட்ட பேர் இருக்காங்களே என ஷிவானிக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

நீச்சல் குளத்தில் குதித்த பாலா

நீச்சல் குளத்தில் குதித்த பாலா

விளையாட்டு பரபரப்பில், ஓடிக் கொண்டிருந்த பாலா, ஒரு சமயத்தில் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்தார். அந்த புரமோ கட்டை விளம்பர இடை வேளைக்காக போட்டதும், அவருக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என ரசிகர்கள் பதறினர். பின்னர் தான் ஜித்தன் ரமேஷ் போட்ட பந்து நீச்சல் குளத்தில் விழுந்ததும், வலை மீது இருந்த பந்தை எடுக்க அவர் குதித்து இறங்கியதும் தெரிய வந்தது. பரபரப்பாவே புரமோ போடுவதில் பலே கில்லாடி தான் பிக் பாஸ் எடிட்டர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X