ஷிவானியோடு இடுப்பை புடிச்ச பாலா.. 2 பேருமே அடங்க மாட்டாங்க போல.. ரசிகர்களை கதறவிடும் 4வது புரமோ!

சென்னை: இன்னைக்கு திடீர்னு விஜய் டிவியிலயே 4வது புரமோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை அதிரச் செய்துள்ளனர்.

பிரிஸ்மா நிறுவன விளம்பர டாஸ்க்காக மீண்டும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே டான்ஸ் போட்டி.

ஷிவானியையும் பாலாவையும் ஜோடி சேர்த்து விட்டு செம ஜாலியா ஷோவை கொண்டு செல்ல பிக் பாஸ் முடிவு செய்திருக்கிறார்.

குரூபிசம் பச்சையாத் தெரியுது

குரூபிசம் பச்சையாத் தெரியுது

இன்றைய முதல் புரமோவில் நடிகர் ஆரியை மீண்டும் போரிங் போட்டியாளர் என ஹவுஸ்மேட்கள் வெறுப்புணர்வு காரணமாக முடிவு கட்ட அவரை மீண்டும் கண்ணாடி சிறையில் அடைத்து விட்டனர். இந்த வீட்டுல யார் யார் குரூபிசம் பண்றாங்க, யார் யார் ஃபேவரிசம் பண்றாங்கன்னு நெத்தியில அடிச்ச மாதிரி சொல்லுவேன் என அவர் கூறியது வைரலானது.

அர்ச்சனாவுக்கும் ஆரிக்கும் சண்டை

அர்ச்சனாவுக்கும் ஆரிக்கும் சண்டை

முதல் புரமோவிலேயே ஆரியை கார்னர் செய்து இப்பவே சொல்லுங்க என ரியோ ராஜ், அர்ச்சனா உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் எகிறிய நிலையில், இரண்டாவது புரமோவில் கண்ணாடி ஜெயிலுக்குள் இருக்கும் ஆரிக்கும், அர்ச்சனாவுக்கும் இடையே பயங்கர சண்டை வெடித்தது. ஆஜீத்துக்கு சோறு போட்டதை அர்ச்சனா பிரச்சனையாக்கிட்டாங்கன்னு ஆரி கம்ப்ளைண்ட்.

அனிதா சம்யுக்தா பஞ்சாயத்து

அனிதா சம்யுக்தா பஞ்சாயத்து

நேற்றைய எபிசோடில் அனிதா சம்பத் அழுது புலம்பி தனது கணவர் பற்றி உருகும் போது, சம்யுக்தா இடை மறித்து, போதும் அனிதா, ரொம்ப லெந்தா போகுதுன்னு நோஸ் கட் பிரச்சனையை, சனம் ஷெட்டி கையில் எடுக்க இருவருக்கும் இடையே சண்டை ஸ்டார்ட் ஆகிட்ட மாதிரி 3வது புரமோவையும் போட்டு வைரலாக்கினர்

மறுபடியும் டான்ஸ்

மறுபடியும் டான்ஸ்

இந்நிலையில், திடீரென தற்போது 4வது புரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பிரிஸ்மா நிறுவனத்தின் விளம்பர டாஸ்க்கிற்காக ஹவுஸ்மேட்கள் அனைவரும் ஜோடி போட்டு மீண்டும் டான்ஸ் ஆட போறாங்க.. சண்டை, அழுகை, டான்ஸ் இதை விட்டா வேற டாஸ்க்கே தெரியாதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாலா ஷிவானி டான்ஸ்

பாலா ஷிவானி டான்ஸ்

மாச்சோ பாடலுக்கு பாலாஜியையும் ஷிவானியையும் ஜோடி சேர்த்து விட்டு ஆட வைத்திருக்கிறார் பிக் பாஸ். சும்மாவே ரெண்டு பேரு ரவுசு தாங்காத நிலையில், டான்ஸ் பிராக்டிஸ் பண்ணுகிறேன் என பாத்ரூம் ஏரியா, பெட்ரூம் ஏரியான்னு புகுந்து விளையாடுறார் பாலாஜி. ஷிவானி ஆர்மி பாவம்.

ஷிவானி இடுப்பை புடிச்சு

ஷிவானி இடுப்பை புடிச்சு

எப்படியாவது இந்த போட்டியை சாக்காக வைத்து ஷிவானியுடன் ஜல்சா பண்ணி விட வேண்டியது தான் என நினைத்த பாலாஜி, என்னவோ ரவுடி பேபி பாட்டுக்கு ஆடுற மாதிரி, ஷிவானியோட இடுப்பையும் காலையும் புடிச்சி தூக்குறதை புரமொவில் பார்த்த பாதி இளைஞர்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துருக்கும்.

மொக்கை ஜோடிகள்

மொக்கை ஜோடிகள்

பாலாவும் ஷிவானிக்கும் பிசிக்கல் டச் கொடுப்பதற்காக மீண்டும் அவர்களையே ஜோடியாக போட்டுருக்காங்க, இந்த வாட்டி வேல்முருகனிடம் இருந்து தப்பித்த சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் உடன் ஜோடி சேர்ந்துள்ளார். வழக்கம் போல நம்ம ஹீரோ ரியோவுக்கு, நிஷா அக்கா தான் ஜோடி. வேல்முருகனுக்கு சம்யுக்தா பேர் ஆகிட்டாங்க.

கேபிக்கும் ஆஜீத் இல்லை

கேபிக்கும் ஆஜீத் இல்லை

ரவுடி பேபி பாட்டுக்கும் கேபியும் ஆஜீத்தும் ஜோடி போட்டு செம டான்ஸ் ஆடிய நிலையில், இந்த போட்டியில் பாலா - ஷிவானி தான் ஹைலைட்டாக தெரிய வேண்டும் என்பதற்காக, கேபியையும், சோமசேகரையும் ஜோடி ஆக்கி இருக்காங்க. அர்ச்சனா அக்கா, மொட்டை தாத்தா, அனிதா, ரம்யா பாண்டியனை எல்லாம் புரமோவில் இருந்தே தூக்கிட்டாங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X