பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நீங்க நல்லவரா கெட்டவரா... குழம்பும் ரசிகர்கள்!

சென்னை : பிக் பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இப்பொழுது பல ரசிகர்களின் இதயங்களை பெற்றுள்ளவர் பாலாஜி முருகதாஸ்.

Recommended Video

Bigg Boss Tamil Balaji Murugadoss with beer bottle video goes viral

கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை பற்றி பேசியதைத் தொடர்ந்து பேசிய பாலாஜி முருகதாஸின் பேச்சு பலரது இதயங்களையும் உருக வைத்தது.

ஒரு புறம் இவருக்கு ஆதரவு பெருகி வர மற்றொருபுறம் சோசியல் மீடியாக்களில் இவரின் சில புகைப்படங்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனிதா அதை முடிக்காமல்

அனிதா அதை முடிக்காமல்

பிக்பாஸ் தொடங்கி கடந்த சில நாட்களாகவே அனிதா சம்பத் சுரேஷ் சக்ரவர்த்தி இடையே ஆரம்பித்த மோதல்கள் தொடர்ந்து கொண்டே போக அனைவரும் அதை சமாதானப்படுத்த நினைக்க கன்னித்தீவு கதை போல அனிதா அதை முடிக்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

இதயங்களையும் உருக வைத்தது

இதயங்களையும் உருக வைத்தது

இவ்வாறு ஒருபுறம் அனிதா, சுரேஷ் சண்டையிட மற்றொருபுறம் சனம் ஷெட்டிக்கும் ரேகாவுக்கு முட்டிக்கொள்ள ஆட்டம் சூடு பிடித்தது. இந்நிலையில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த கடினமான தருணங்களைப் பற்றி பேச அவர்களைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் சொந்த வாழ்க்கையில் நடந்ததாக கூறிய கதை பிக் பாஸ் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் பார்க்கும் பார்வையாளர்களின் இதயங்களையும் உருக வைத்தது.

சர்ச்சைக்குரிய புகைப்படங்கள்

சர்ச்சைக்குரிய புகைப்படங்கள்

பாலாஜி முருகதாஸின் உருக்கமான கதையைக் கேட்ட ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் அவருக்கு ஆதரவாக ரசிகர் கூட்டம் உருவாகியதை அடுத்து இவரின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இப்போது வைரலாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிரடியாக அவைகளை நீக்கியுள்ளார்

அதிரடியாக அவைகளை நீக்கியுள்ளார்

தந்தையின் குடிப்பழக்கத்தால் தான் மிகவும் துன்புறுத்தப்பட்டதாக கூறிய பாலாஜி முருகதாஸ் மதுவிலேயே குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்டிருந்த நிலையில் அவை வைரலானதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு இருக்கும் நல்ல பெயருக்கு இது கலங்கம் விளைவிக்கும் என சுதாரித்துக் கொண்ட இவரது இன்ஸ்டா ஐடியின் அட்மின் அதிரடியாக அவைகளை நீக்கியுள்ளார்.

நல்லவரா கெட்டவரா

நல்லவரா கெட்டவரா

எனினும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏற்கனவே கசிந்த நிலையில் அதைப் பார்த்த ரசிகர்கள் எதை நம்புவது என தெரியாமல் இப்பொழுது குழப்பத்தில் உள்ளனர். இன்னும் ஒரு சிலர் பாலாஜி முருகதாஸ் சொன்ன கதை வெறும் கட்டுக்கதை, அவர் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து நல்ல பெற்றோர்களின் அரவணைப்பில் சொகுசு பள்ளியிலேயே வளர்ந்தவர் எனவும் ஒரு சிலர் கூறிவருகின்றனர். இதில் எதை நம்புவது என்றே தெரியவில்லை பாலாஜி நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X