பத்ரகாளியான பாலா.. கையில் யார் தலையெல்லாம் இருக்குன்னு பாருங்க.. கேவலமான எடிட்.. ஜோ மைக்கேல் புகார்

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் நெட்டிசன்களின் அட்டகாசங்கள் அடங்கவில்லை.

பாலாஜியின் பெய்டு பி.ஆர் டீம் செய்த கேவலமான எடிட் என ஜோ மைக்கேல் பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பத்ரகாளியாக பாலாவும், அவரது கையில் ஜோ மைக்கேல், அர்ச்சனா, ரியோ ராஜ், ஆரி, ஜேம்ஸ் வசந்த், ரவீந்திரன் உள்ளிட்டோர் தலையும் காலில் கமலும் இருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட போட்டோ சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரசிகர்கள் சண்டை

ரசிகர்கள் சண்டை

பாலாவும் ஆரியும் பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டதை விட அதிகளவில் அவர்களது ரசிகர்கள் மற்றும் பி.ஆர். டீம் சமூக வலைதளங்களில் கேவலமான சண்டைகளையும் குடும்பங்களை கொச்சைப்படுத்தி ஏகப்பட்ட ட்வீட்களையும் போட்டு பல சர்ச்சைகளை கிளப்பினர். பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே முடிந்த பிறகும் அவர்களது சண்டை இன்னமும் ஓயவில்லை.

டுபாக்கூர் பிரச்சனை

டுபாக்கூர் பிரச்சனை

பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, சனம் ஷெட்டி பெற்ற அழகிப் பட்டத்தை டுபாக்கூர் கம்பெனியில் இருந்து பெற்றார் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். அந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஜோ மைக்கேல் பாலா மீது புகார் கொடுக்கப் போகிறேன் என்று பாலாவுக்கு எதிராக திரும்பினார்.

அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம்

அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம்

அதன் பின்னர், அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணித்தான் சனம் ஷெட்டிக்கு அந்த டைட்டில் கிடைத்தது என பாலா பேசினார் என சனம் ஷெட்டி எழுதிய புகாரை பிக் பாஸ் நிகழ்ச்சியினர் அப்படியே மறைத்து பாலாவுக்கு ரெட் கார்டு கொடுக்காமல் ரன்னர் அப் ஆக்கினர். இந்த பிரச்சனையிலும் ஜோ மைக்கேல் ஏகப்பட்ட பேட்டிகளில் பாலாவை கிழித்துத் தொங்கவிட்டார்.

பத்ரகாளியான பாலா

பத்ரகாளியான பாலா

இந்நிலையில், தற்போது பாலாஜி முருகதாஸின் புகைப்படத்தை பத்ரகாளியின் போட்டோவும் எடிட் செய்து அவரது பெய்டு பி.ஆர். டீமினர் வெளியிட்டுள்ளனர் என்றும் அந்த ஐடியை புகார் செய்துள்ளதாகவும் ஜோ மைக்கேல் போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது. பிக் பாஸ் முடிந்த பிறகும் நெட்டிசன்கள் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜோ மைக்கேல் தலை

ஜோ மைக்கேல் தலை

அந்த எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தில் பத்ரகாளியாக இருக்கும் பாலாவின் கைகளில் ஜோ மைக்கேல், அர்ச்சனா, ஆரி, ரியோ ராஜ், ஜேம்ஸ் வசந்த் மற்றும் ரவீந்திரன் உள்ளிட்டோரின் தலைகள் இருக்கின்றன. பாலாஜி முருகதாஸ், அத்தனை பேரையும் வீழ்த்தி வெற்றிப் பெற்றார் என்கிற அர்த்தத்தில் அவரது பி.ஆர். டீம் இந்த வேலை செய்திருப்பதாக தனது தலையும் அதில் இருப்பதை பார்த்து டென்ஷனான ஜோ மைக்கேல் ட்விட்டரில் திட்டியுள்ளார்.

காலில் கமல்

காலில் கமல்

எல்லாவற்றுக்கும் மேலாக, பாலாவுக்கு ரெட் கார்டு கொடுக்காமல், பாலா செய்த அக்கிரமங்களை தட்டிக் கேட்காமல், கடைசி வரை தட்டிக் கொடுத்து, ரன்னர் அப் ஆக்கிய கமல்ஹாசனையும் காலில் போட்டு மிதித்தது போல செய்யப்பட்டு இருக்கும் எடிட்டையும் சுட்டிக் காட்டி விளாசி உள்ளார் ஜோ மைக்கேல்.

ஜெயில் கன்ஃபார்ம்

ஜெயில் கன்ஃபார்ம்

தம்பி பாலாஜி, உங்க பெய்டு ஆர்மியோட கிரியேட்டிவ் சென்ஸ் உங்களை உள்ள வைக்கப் போகிறது கன்ஃபார்ம் என்றும் தனது ட்வீட்டில் ஜோ மைக்கேல் குறிப்பிட்டுள்ளார். ஜோ மைக்கேலின் இந்த ட்வீட்டை பார்த்த பாலா ரசிகர்கள் அவரை திட்டி ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

கண்டிப்பாரா பாலா

கண்டிப்பாரா பாலா

எந்த போட்டியாளரின் ரசிகராக இருந்தாலும், அடுத்தவர்களை காயப்படுத்தும் இது போன்ற செயல்களை செய்வது அநாகரீகம். ட்விட்டரில் நடக்கும் இது போன்ற ஃபேன் ஃபைட்டுகளை ஊக்குவிக்காமல், அதனை கண்டிக்க வேண்டியது, அந்த போட்டியாளரின் கடமை தான். பாலாஜி முருகதாஸ் இந்த அநாகரீக செயலை கண்டிக்க வேண்டும் என்றும் தனது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Recommended Video

Bigg Boss Rio Raj First exclusive video | உங்க அன்புக்கு நன்றி - Filmibeat Tamil
பாலாவுக்கு என்ன சம்மந்தம்

பாலாவுக்கு என்ன சம்மந்தம்

நெட்டிசன்கள் யாராவது பாலாவின் ரசிகர்கள் என்கிற போர்வையில் இது போன்ற எடிட்டை செய்திருக்கலாமே, இதுக்கும் பாலாவுக்கும் என்ன சம்மந்தம், ஏன் தேவையில்லாமல், பாலாஜி முருகதாஸின் பெயரை இழுக்குறீங்க என்றும் அவரது ரசிகர்கள் ஜோ மைக்கேலை பதிலுக்கு கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X