பாலாஜி முருகதாஸுக்கு என்னவொரு வரவேற்பு பாருங்க.. மேள தாளத்துடன்.. மரண குத்தாட்டம்.. பக்கா மாஸ்!

சென்னை: செண்டை மேளத்துடன் ரம்யா பாண்டியன் வீட்டுக்கு வந்து கேக் கட் பண்ணிய வீடியோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும், பாலாஜி முருகதாஸின் வரவேற்பு வீடியோவை பார்க்க ரொம்பவே ஆசைப்பட்டனர்.

பாலா குறித்த எந்த வீடியோவும் கிட்டத்தட்ட ஒரு வார காலமாக வெளியே வராத நிலையில், தற்போது வரிசையாக ஏகப்பட்ட வரவேற்பு வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகி பாலாஜி முருகதாஸின் ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்ற பாலாஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ஆரி அர்ஜுனன் டைட்டிலை தட்டிச் சென்ற நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பெற்றார். கமல்ஹாசன் பாலாவின் கரங்களாலே ஆரிக்கு வெற்றி கோப்பையை கொடுத்தது பாலாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

எலியும் பூனையுமாக

எலியும் பூனையுமாக

டாம் அண்ட் ஜெர்ரி, விக்ரம் வேதா போல எலியும் பூனையுமாக பாலாஜி முருகதாஸும் ஆரியும் இந்த சீசனில் ஏகப்பட்ட சண்டைகளை போட்டு சமாதானம் ஆகி உள்ளனர். இவங்க ரெண்டு பேரும் இல்லைன்னா இந்த சீசன் ரொம்பவே போர் அடித்து போயிருக்கும். வெறும் விஜய் டிவி ஆட்களை வைத்தே குடும்ப ஷோ நடத்தியது போல இருந்திருக்கும்.

அன்புக்கு நன்றி

ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள், விமர்சனங்கள், சர்ச்சைகள் பாலாஜி முருகதாஸ் மீது சமூக வலைதளத்தில் பரவி இருந்தாலும், அதை எல்லாம் ஹைலைட் பண்ணாமல், தனக்கு கிடைத்த பாசிட்டிவ் விசயங்களை மட்டுமே ஹைலைட் பண்ணி ரசிகர்களின் அன்புக்கு நன்றி, கல்லடி கிடைக்கும்னு நினைச்சேன், அன்படி கிடைச்சிருக்கு சீக்கிரமே லைவ் வருகிறேன் என்று கூறி அவர் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மரண குத்து வரவேற்பு

ரம்யா பாண்டியன் வீடு திரும்பும் போது செண்டை மேளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம் நடந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பாலாவின் வரவேற்பு வீடியோ எதுவுமே இல்லையே, இப்படி ஒரு வெற்றியை பெற்றும் அவரை யாரும் வரவேற்க வில்லையா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், தற்போது மரண குத்து நடனத்துடன் மேள தாளத்துடன் ஆட்டம் போட்டு வீட்டுக்குப் போகும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆரத்தி எடுத்த ரசிகர்

பாலாவின் அண்ணன் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவிலும் வந்து அவருக்கு சப்போர்ட் செய்தார். பாலா வீட்டுக்கு வரும் போது மட்டுமின்றி, அவரது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு வரும் போது, ரசிகரின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து பாலாவை வரவேற்றதும், ஆரத்தியை எடுத்தவர்களிடம் பாலா அதை நான் கொட்டட்டா என கலகலப்பாக பேசிய வீடியோவும் பாலாவின் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ரசிகருக்கு முத்தம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாஜி முருகதாஸின் ரசிகர்களாக மாறியுள்ளனர். ஏகப்பட்ட இளம்பெண்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்தே பாலாவின் ரசிகைகளாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரசிகர் ஒருவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பாலா, அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்து அவரை சந்தோஷப்படுத்தும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுடன் பாலா

குழந்தைகளுடன் பாலா

ஏற்கனவே சொன்னது போல பாலாவுக்கு இந்த பிக் பாஸ் சீசனில் நிறைய குட்டி ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பாலாவுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சீக்கிரமே லைவ்வில் பாலா வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கும் விடை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X