Just In
- 10 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 10 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 10 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 10 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 24.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டணும்…
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் யார்? போட்டியில் பாலாஜியும் ஜித்தன் ரமேஷும் இருக்காங்க!
சென்னை: இந்த வாரத் தலைவரான ரியோ ராஜை எந்தளவுக்கு வச்சி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு ஹவுஸ்மேட்கள் வச்சி செய்து விட்டனர்.
இந்நிலையில், அடுத்த வார தலைவர் பதவிக்கான போட்டிக்கு ஜித்தன் ரமேஷ், பாலாஜி முருகதாஸ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
பிசிக்கல் டாஸ்க் வைத்தால் பாலாஜி ஈஸியா தலைவர் பதவியை தட்டி தூக்கிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ !

ஸ்மார்ட் மூவ்
போன வாரம் சுச்சியுடன் பாலாஜியை ஜெயிலில் போட்டது தான் போட்டார்கள். தன்னை யாரெல்லாம் வான்டட்டா அனுப்பினார்களோ? அவர்களை எல்லாம் டார்கெட் பண்ணி வேற லெவல் ஸ்மார்ட் மூவ் கேமை இந்த வாரம் பாலாஜி முருகதாஸ் ஆடி உள்ளார். சிறந்த போட்டியாளர் என்ற பெயரையும் எடுத்து தலைவர் போட்டிக்கு தகுதியாகி உள்ளார்.

பாலா பக்கம் சாய்ந்த ரம்யா
சோமசேகர் பண்ண லவ் டார்ச்சரால், ரியோ பக்கம் போன ரம்யா பாண்டியனை அழகா சம்யுக்தாவை அந்த பக்கம் அனுப்பிவிட்டு, அர்ச்சனா, ரியோவின் வேல் கேங்கில் இருந்து ரம்யா பாண்டியனை பிரித்து தனது பக்கம் சேர்த்துக் கொண்டார் பாலாஜி முருகதாஸ். ஏற்கனவே சனம் ஷெட்டி, அனிதா சம்பத் என ஒவ்வொருவராக பாலா பக்கம் சாய்ந்து வருகின்றனர். வேல் கேங்கை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு பாலாவிடமும் இப்போ பவர் வந்துவிட்டது.

தூங்கினாலும் தலைவன் கிங்டா
ரம்யா பாண்டியன் ஜித்தன் ரமேஷை என்ன தான் ஓட்டு ஓட்டென ஓட்டினாலும், கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல், பேசி வந்த ஜித்தன் ரமேஷ், நீங்களே தயவு செஞ்சு போனை வச்சிடுங்களேன் என ரம்யா பாண்டியனையே கெஞ்ச விட்ட காரணத்திற்காக, எப்படி தூங்கினாலும் தலைவன் கிங்டா என தலைவர் போட்டிக்கு ரமேஷை தேர்வு செய்துள்ளனர்.

ஏற்கனவே கேப்டன்
குக்கிங் டீமில் இந்த வாரம் ரம்யா பாண்டியனை ரியோ எடுத்ததை அவர் பிரச்சனையாக கிளப்பினாலும், குக்கிங் டீமில் அவரது பணி சிறப்பாக இருந்தது என்று தான் பலரும் பாராட்டி ரம்யா பாண்டியனை தலைவர் போட்டிக்கு தேர்வு செய்துள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்திலேயே, பந்து கிடைக்காமல் கேப்டனான ரம்யா, இந்த முறை போட்டிப் போட்டு ஜெயித்து தனது ரியல் திறமையை காட்டுவாரா? என்று பார்ப்போம்.

பிசிக்கல் டாஸ்க்னா பாலா தான்
பாலாஜி முருகதாஸ் மற்றும் ஜித்தன் ரமேஷ் இதுவரை கேப்டனாக ஆனதே இல்லை. பிசிக்கல் டாஸ்க் என வந்து விட்டால், பாலாஜி முருகதாஸ் பக்காவாக விளையாடி ஜெயித்து விடுவார். அர்ச்சனாவை தேர்வு செய்தது போல, நாளைக்கு கமல் தேர்வு செய்தால், மீண்டும் ரம்யா பாண்டியனே வர வாய்ப்பிருக்கிறது.