எனக்கு ராஜாவா நான் வாழுறேன்.. பிரமாதமா கேம் ஆடும் பாலா.. சனம்க்கு ஆதரவு, அர்ச்சனாவுக்கு அட்வைஸ்!
சென்னை: பிக் பாஸ் வீடு நேற்று நீதிமன்ற செட்டப் உடன் காரசாரமாகவே சென்றது.
சுசித்ரா உள்ளே நுழையும் போதே, போட்டியாளர்களை வேற மாதிரி விளையாட வைக்கிறேன்னு சொன்னதை, சூப்பராவே செய்து வருகிறார்.
சனம் ஷெட்டிக்கு எதிராக புகார் கொடுத்து ஜெயித்த பாலாஜி, சனம் ஷெட்டிக்கும் சுரேஷுக்கும் எதிரான வழக்கின் போது ஆதரவு தெரிவித்து சனம் ஷெட்டியை ஜெயிக்க வைத்தார்.

நீங்க நல்லவரா? கெட்டவரா?
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கமல்ஹாசனை தாண்டி இன்னொரு போட்டியாளரையும் பிக் பாஸ் ரசிகர்கள் பார்த்து, நீங்க நல்லவரா? கெட்டவரா? என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். அது வேற யாரும் இல்லை, நம்ம பாலாஜி முருகதாஸ் தான். சனம்க்கு எதிராக கேஸும் போடுறாரு, சனம்க்கு சப்போர்ட் பண்ணி வாதாடி ஜெயிச்சும் கொடுக்கிறார்.

தாத்தாவுக்கு வேட்டு வைக்க
பாலாஜி முருகதாஸ் பற்றி சுரேஷ் தாத்தா அப்படி பேசியதில் இருந்தே, பாலாஜிக்கு சுரேஷுக்கு ஒரு சரியான வேட்டு வைக்க வேண்டும் என காத்துக் கொண்டிருந்தார். சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தி வழக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சனம்க்கு ஆதரவு கொடுப்பது போல வாதாடி சுரேஷை அசிங்கப்படுத்தி விட்டார்.

எதிராக வாதாடிய ஷிவானி
பாலாஜி முருகதாஸின் காதலியாக பிக் பாஸ் வீட்டில் வலம் வரும் ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பாலாஜி பேசத் தொடங்கியதும், அவருக்கு எதிராக வந்து நின்று சூப்பராக வாதாடினார். அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைக்கக் கூடாது என்றால், உங்களுக்கும் ஆரிக்கும் இடையே பிரச்சனை நடந்த போது கூட நீங்களும் அப்படித் தானே பண்ணீங்க என்றார்.

சேம் சைடு கோல்
சனம் ஷெட்டியை காப்பாற்ற கடுமையாக வாதாடினார் பாலா. ஆனால், அவரது ஆட்டம் முழுவதும் அவருக்கான கேமாக மட்டுமே இருந்தது தான் சூப்பர். ஆரி, ரம்யா பாண்டியன் மற்றும் அனிதா மட்டுமே சனம் ஷெட்டிக்காக உண்மையாக வாதாடினார்கல். கடைசியில், சனம் ஷெட்டியை தவறாக நானும் தான் நினைத்துக் கொண்டு பேசினேன் என சேம் சைடு கோல் அடிக்க, சுசித்ரா சனம்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.

அர்ச்சனாவுக்கு அட்வைஸ்
உனக்கு சப்போர்ட் பண்ணி பேசின எங்களுக்கு எல்லாம் செருப்படி கொடுப்பது போல, நீ சனம் ஷெட்டிக்கு ஆதரவு கொடுத்து பேசியது இருந்ததாக அர்ச்சனா சொல்ல, யார் பக்கம் வீக்கா இருக்கோ, அங்க வாதாடி ஜெயிக்கிறது தான் செம, இது கேம், கேமா பாருங்க என இன்ஸ்டன்ட் மம்மி அர்ச்சனாவுக்கு அட்வைஸ் கொடுத்து ஆப்பு வைத்தார் பாலா.


Click it and Unblock the Notifications











