For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சேட்டைக்காரன் சார் இந்த பாலாஜி.. நீச்சல் குளத்தில் ஒரு பொண்ண எப்படி தூக்கி இறக்குறாருன்னு பாருங்க!

  |

  சென்னை: பாலாஜி முருகதாஸ் தான் ரொம்ப ஒழுக்கம் என்றும், தனது பெற்றோர்கள் தான் தவறானவர்கள் எனக் கூறி அவங்கள அசிங்கப்படுத்திய நிலையில், பாலாஜியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி வருகிறது.

  இன்டர்நேஷனல் சூப்பர் மாடல்னா சும்மாவா என்கிற ரேஞ்சுக்கு வாழ்ந்துவிட்டு, இப்போ பிக் பாஸ் வீட்டுல லஞ்ச் வரலைன்னு பொய்யா அளந்து விட்டு வராரு என்கிற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், தற்போது கசிந்துள்ள ஒரு வீடியோவில் பாலாஜி வேற லெவல் சேட்டைக்காரன் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது.

  அவரு புடிச்சிட்டாரு.. ஹவுஸ்மேட்ஸ் மனச புடிச்சிட்டாரு.. வைரலாகும் பிக்பாஸ் மீம்ஸ்!

  என்ன ஒரு கேடித்தனம்

  என்ன ஒரு கேடித்தனம்

  பிக் பாஸ் வீட்டில் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தனது பழைய வீடியோக்கள், போட்டோக்கள் என தான் செய்த அத்தனை சேட்டைகளும் ரசிகர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதள பக்கத்தில் இருந்த அனைத்தையும் நீக்கி உள்ளார்.

  தண்ணிக்குள்ள தண்ணி

  தண்ணிக்குள்ள தண்ணி

  நீச்சல் குளத்தில் குளித்தபடியே, பீரை பொங்க பொங்க தலையில் ஊற்றிக் கொண்டு குளிக்கும் டிக்டாக் வீடியோவில் இருந்த ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் கசிந்து, அம்மா அப்பாவை ஆல்கஹாலிக் என சொன்ன பாலாஜியின் முகமுடியை நெட்டிசன்கள் கிழித்து எறிந்துவிட்டனர்.

  பெருங்கோபம்

  பெருங்கோபம்

  சிறு வயதில் அப்பாவிடம் கேஸ் டியூபால் அடி வாங்கினேன், அம்மாவும் அப்பா உடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க, என தனது சோகக் கதையை சொன்னதும், மக்கள் தவறான பெற்றோர்கள் என பாலாஜியின் பெற்றோர்களையும், அது போன்ற பெற்றோர்களையும் திட்டத் தொடங்கினர்.

  வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சு

  வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுச்சு

  ஆனால், தற்போது வெளியாகி வரும் வீடியோக்கள் மற்று போட்டோக்களை பார்த்தால், பாலாஜி முருகதாஸ் எந்த அளவுக்கு குடியும் குடித்தனமுமாக இருந்துள்ளார் என்பது அம்பலமாகி வருகிறது. அவருடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிவருவதை பார்த்து, அட வெக்கங்கெட்டவனே, இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டை போட்டு திரியுற என வெளுத்து வாங்கி வருகின்றனர்.

  எல்லாமே பொய்

  எல்லாமே பொய்

  மேலும், பாலாஜி முருகதாஸின் ஜிம் டிரெய்னர் மற்றும் பாலாஜி பற்றி தெரிந்தவர்கள் அவர் சொன்ன கதை முற்றிலும் ஜோடிக்கப்பட்ட ஒன்று என்றும், அவர் பொய்யான கதையை பிக் பாஸ் வீட்டில் பேர் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவருடைய அம்மா அப்பா அந்த அளவுக்கெல்லாம் டார்ச்சர் பண்ணதில்லை. செம வசதியான வீட்டுப் பிள்ளை எனக் கூறி அவரது சாயத்தை வெளுக்க வைத்துள்ளனர்.

  நீச்சல் குளத்தில் பெண்ணை தூக்கி இறக்கி

  இந்நிலையில், பாலாஜி முருகதாஸின் ரகசிய வீடியோ ஒன்றையும் நெட்டிசன்கள் இணையத்தில் கசியவிட்டுள்ளனர். அதில், நீச்சல் குளம் ஒன்றில், இளம் பெண் ஒருவரை, வெயிட் லிஃப்டிங் தூக்குவது போல, தூக்கி இறக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பாலாஜி முருகதாஸ் எந்த அளவுக்கு ஒரு சேட்டைக்காரன் என்பதை புட்டு புட்டு வைத்திருக்கிறது.

  புது போட்டோ

  புது போட்டோ

  பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பாலாஜி முருகதாஸ் தனது டீமை வைத்து தனது புகைப்படங்களையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட செய்துள்ளார். பாலாஜி முருகதாஸின் அட்டகாசமான சிக்ஸ்பேக் பாடி பில்டிங் போட்டோ ஒன்று சற்று நேரத்திற்கு முன்னதாக பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.

  சரியான வில்லன்

  சரியான வில்லன்

  ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக இவர் ஏன் கமிட் ஆனார் என்பது இப்போது தான் தெரிகிறது என்றும் நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸ் பற்றி ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னும் இந்த புத்துக்குள்ள எத்தனை பாம்பு இருக்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  Balaji Murugadoss private video with a girl in swimming pool goes viral. After he slammed his parents now, netizens scolds him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X