மில்கா சிங் நினைவாக தடகள வீரரை தத்தெடுக்க போறேன்.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் பிராமிஸ்!

சென்னை: பறக்கும் சீக்கியர் என பெயர் எடுத்த இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.

Recommended Video

Milkha SIngh காலமானார்! Coronaவால் நம்மை விட்டு பிரிந்தார் | OneIndia Tamil

அவரது நினைவுக்கு நடிகர் அமிதாப் பச்சன் முதல் மோகன்லால் வரை ஏகப்பட்ட இந்திய சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், யாருமே அறிவிக்காத அளவுக்கு மில்கா சிங் நினைவாக தடகள வீரர் ஒருவரை தான் தத்தெடுக்கப் போவதாக பாலாஜி முருகதாஸ் அறிவித்துள்ளார்.

மில்கா சிங் காலமானார்

மில்கா சிங் காலமானார்

இந்தியாவின் தலை சிறந்த தடகள வீரரான மில்கா சிங் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஜூன் 18ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சினிமா பிரபலங்கள் இரங்கல்

சினிமா பிரபலங்கள் இரங்கல்

அமிதாப் பச்சன், ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, ஃபர்கான் அக்தர், மோகன்லால், நிவேதா பெத்துராஜ், ஆத்மிகா என ஏகப்பட்ட இந்திய சினிமா பிரபலங்கள் தடகள ஜாம்பவான் மில்கா சிங் கொரோனா நோய் தொற்றால் மறைந்த செய்தி கேட்டு மனம் நொந்து போயினர்.

தத்தெடுக்கப் போறேன்

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ், மில்கா சிங் நினைவாக ஒரு தடகள வீரரை தத்தெடுக்கப் போவதாக தனது ட்விட்டரில் பிராமிஸ் செய்துள்ளார். பாலாவின் இந்த ட்வீட்டை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அவரது நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

அந்த விவசாயம்

பாலாவின் ட்வீட்டுக்கு கீழே பலரும் அவரை பாராட்டி வரும் நிலையில், நெட்டிசன் ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விவசாயம் பண்ணப் போறேன்னு கமல் சார் கிட்ட சத்தியம் பண்ணீங்களே அது என்னாச்சு என கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால், அந்த கேள்விக்கு பாலா எந்தவொரு பதிலையும் இதுவரை கூறாமல் வழக்கம் போல் நெகட்டிவிட்டியை ஸ்கிப் பண்ணி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X