Fire Box Office Collection: ரச்சிதாவின் கிளாமர்.. பாலாவின் எக்குத்தப்பு ஆட்டம்.. ஃபயர் பட வசூல் விவரம்
சென்னை: பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் என பெரும்பாலான பிக் பாஸ் பிரபலங்கள் நடித்த ஃபயர் படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அதாவது இரண்டு தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் சிங்கம் புலி, காயத்ரி ஷா, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாரே தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் நாகர்கோவில் பகுதியில் இருந்த காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததை மையமாக கொண்டு விழிப்புணர்வு படமாக எடுக்கப்பட்டது. படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
படத்தின் புரோமோஷன்களின் போதே, படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. அதே நேரத்தில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், ரச்சிதா மற்றும் பாலாஜியின் கிளாமரான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, ரச்சிதாவின் கிளாமர் நடனம் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இவரை பலரும் பலவிதமாக விமர்சித்தனர். ரச்சிதா ஏன் இந்த அளவிற்கு கிளமராக நடித்தார். இயக்குநரும் ரச்சிதாவின் கிளாமரை வைத்து படத்தை லாபம் பார்த்துவிடலாம் என நினைக்கிறார் என பலரும் விமர்சித்தனர்.

படத்தின் புரோமோஷனின்போது, இந்தப் படத்தில் நடிக்க தைரியம் மிகவும் முக்கியம். மூன்று படங்களில் நடித்து முடிக்கும்போது என்ன மாதிரியான அனுபவம் கிடைக்குமோ அந்த அனுபவத்தை இந்த படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்தது. படத்தில் பல நெருக்கமான காட்சிகள் உள்ளது. அந்தக் காட்சியில் நடிக்கும் போது சக நடிகைகளுக்கு என்னுடன் நடிக்க சௌகரியமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் படத்தில் நடிக்க முடியும். இந்தப் படத்தில் பல காட்சிகளில் சிரமப்பட்டுதான் நடித்தேன் எனக் கூறினார்.

பாராட்டு: அதேபோல் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான, ஜே. சதீஷ் குமார் படம் குறித்து கூறும்போது, இந்தப் படத்தில் நடித்த பாலாவுக்கு அவருக்கு நான் பேசிய சம்பளத்தை விடவும் அதிகம் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்தப் படம் விழிப்புணர்வு நோக்கத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது. படத்தினைப் பார்த்த பொதுமக்கள் படம் குறித்து சிறப்பான கருத்துக்களை தெரிவித்தனர்" எனக் கூறினார். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் விழிப்புணர்வு நோக்கத்துடன் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என கருத்து தெரிவித்தனர். ரசிகர்களின் இதுபோன்ற கருத்து படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வசூல்: படம் நேற்று முன்தினம், அதாவது காதலர் தினத்தில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது. படம் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்ததால், முதல் நாளில் படம் ரூபாய் 20 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது நாளான நேற்று அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி படம் ரூபாய் 30 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் படம் முதல் இரண்டு நாளில் ரூபாய் 50 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று வார இறுதி நாள் என்பதால் படத்தின் வசூல் இன்று மேலும் அதிகரிக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.

பொறுப்பு துறப்பு: படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்களில் பெறப்பட்ட தகவலே தவிர, படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் விபரம் அல்ல. மேலும்


Click it and Unblock the Notifications











