ஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா? ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்!

சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே முடிந்து கிட்டத்தட்ட ஒரு வார ரெஸ்ட்டுக்கு பிறகு, ரசிகர்களுடன் பாலாஜி முருகதாஸ் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ஏகப்பட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டி.ஆர்.பி கிங்கான பாலாஜி முருகதாஸ், மீடியாக்களுக்கு எப்போது பேட்டி கொடுப்பார் என்றும், லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா? என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட அரை மணிநேரம் லைவ்வில் ஏகப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

Recommended Video

ஆரி படத்திற்கு ஆதரவு கொடுங்கள் | PRODUCER ABUBUCKER PRESSMEET | FILMIBEAT TAMIL

பிடித்த போட்டியாளர்

பிடித்த போட்டியாளர்

பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்கிற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், அது உங்களுக்கே தெரிந்திருக்கும் நான் பிக் பாஸ் வீட்டிலேயே சொல்லியிருக்கேன் என ஷிவானி நாராயணன் பற்றி மறைமுகமாக பேசினார். மேலும், ஆஜீத் ரொம்ப க்யூட் பாய் என்றும், ஆஜீத் மற்றும் சம்யுக்தாவை பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே மீட் பண்ணதாகவும் கூறினார்.

கமல் சார் பெட்

கமல் சார் பெட்

கமல் சாரோட பெட் ஆகிட்டீங்களே என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த பாலாஜி முருகதாஸ், அது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே கமல் சாரை ரொம்பவே பிடிக்கும். அவர் புரியாத படி பேசுவதை டீகோட் பண்ணுவதே ரொம்ப சூப்பராக இருக்கும். பிக் பாஸ் வீட்டில் அவரிடம் அடிக்கடி பேசும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் என்றார்.

அடுத்த மாதம் ரிலீஸ்

அடுத்த மாதம் ரிலீஸ்

புதுசா படம் ஏதும் பண்றீங்களா என்கிற கேள்விக்கு, அடுத்த மாதம் ஏற்கனவே நான் நடிச்ச படம் ஒன்று ரிலீஸ் ஆகுது. அதில், ஹீரோவாக நடிக்கல, கேரக்டர் ரோல் தான் பார்த்து என்ஜாய் பண்ணுங்க, நிறைய கதைகள் வருது, ஸ்க்ரிப்ட் கேட்டுட்டு இருக்கேன், சீக்கிரமா ஒரு நல்ல படத்துல ஹீரோவா நடிக்கிற முயற்சியில இறங்கியிருக்கேன். உங்க சப்போர்ட் தேவை என்றார்.

ஆரியுடன் நடிப்பீங்களா

ஆரியுடன் நடிப்பீங்களா

ஆரி அர்ஜுனன் உடன் இணைந்து நடிப்பீர்களா என்கிற கேள்வியை ஒரு ரசிகர் எழுப்ப, கண்டிப்பா நடிப்பேன். ரெண்டு பேருக்கும் நல்ல கதாபாத்திரத்தோட கதை அமைஞ்சா சேர்ந்து பண்ண வேண்டியது தான். ஆரி அண்ணன் கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வீட்டில் யார் கூடவும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க விளையாடின கேம் காரணமாத்தான் சண்டை போட்டோம். தனிப்பட்ட தகராறு இல்லை என்றார் சிரித்துக் கொண்டே..

விவசாயம் பண்ணுவீங்களா

விவசாயம் பண்ணுவீங்களா

கண்டிப்பா விவசாயம் பண்ணுவேன்.. சும்மா மேடைக்காக அதை சொல்லல.. நிச்சயம் அது எனக்குள்ள இருந்து வந்த வார்த்தைகள் தான். முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு, சரியான தருணத்தில் கட்டாயம் விவசாயம் பண்ணுவேன். வார்த்தை மாறமாட்டேன். எல்லோரும் கொடுத்த அன்புக்கு நன்றி என பேசிய பாலா மேலும், ஏகப்பட்ட கேள்விகளுக்கு அந்த லைவ் சாட்டில் விடை அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X