Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ப்பா.. அப்படியே ஹிரித்திக் ரோஷன் மாதிரியே இருக்காரே.. பிக் பாஸ் பாலாஜி முருகதாஸின் மிரட்டல் லுக்!
சென்னை: மீண்டும் தனக்கு மிகவும் பிடித்தமான இடமான ஜிம்முக்கு சென்று வொர்க்கவுட் செய்த பிறகு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.
மிஸ்டர் இன்டர்நேஷனல் உள்ளிட்ட பல ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற பாலா பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
தனக்கு எது சரியென படுகிறதோ அதை கடைசி வரை செய்து வந்த பாலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆனார்.
முரட்டு பயில்வான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே முரட்டு பயில்வானாக இருந்து வந்தார் பாலாஜி முருகதாஸ். கெட்டவன் டு நல்லவன் என்கிற ஸ்ட்ராட்டஜியை கடைபிடித்து அழகாக ஏகப்பட்ட ரசிகர்களையும் சம்பாதித்து பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் ரன்னர் அப் ஆனார்.
சர்ச்சை நாயகன்
இந்த சீசனில் சர்ச்சை நாயகனாகவும் பாலாஜி முருகதாஸ் தான் இருந்து வந்தார். சனம் ஷெட்டி உடனான சண்டை, ஷிவானியுடன் ரொமான்ஸ் டிராக், ஆரியுடன் சண்டை, அர்ச்சனாவுடன் சண்டை, ஷிவானியை திட்டியது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
வெள்ளிக்கிழமை ராமசாமி
தனக்கு சரி என்று ஒரு விஷயம் படவில்லை என்றால் உடனே அவர்களிடம் சண்டை போட எப்போதுமே பாலா தயங்கியதில்லை. அதே போல, யாரிடம் சண்டை போட்டாலும், பின்னர், அது சரியோ தவறோ அவர்கள் மனதை அந்த சண்டை காரணமாக புண்படுத்தி விடக் கூடாது என்பதற்காக உடனே போய் மன்னிப்பும் கேட்டு விடுவார். அதனாலே பாலாவை நெட்டிசன்கள் வெள்ளிக் கிழமை ராமசாமி என கிண்டலும் செய்தனர்.
பெண்கள் கூட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாவுக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகைகளாக உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் எங்கே சென்றாலும், பாலாவை பெண்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராஃப் வாங்குவது, செல்ஃபி எடுப்பது என அன்பு தொல்லைகள் அதிகரித்துள்ளது.
நண்பர்களுடன் அவுட்டிங்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரும்பாலும் போட்டியாளர்கள் தங்கள் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால், இந்த சீசனில் பலரும் அன்பால் பிணைக்கப்பட்டு இருப்பதால், அடிக்கடி சந்தித்துக் கொண்டு நல்ல நட்பை வெளியிலும் பேணி வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற சோமசேகரின் பிறந்தநாள் கொண்டாட்டம், ஆஜீத்தின் ஸ்டூடியோ திறப்பு விழா என பாலா தனது பிக் பாஸ் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகிறார்.
ஹிரித்திக் ரோஷன் போல
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது கூட இருப்பதை கொண்டு தினமும் வொர்க்கவுட் செய்வதை விடாமல் கடைபிடித்து வந்தார் பாலாஜி முருகதாஸ். இந்நிலையில், தற்போது தனக்கு மிகவும் பிடித்தமான இடமான ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்படியே ஹிரித்திக் ரோஷன் போல இருக்கீங்க பாலா என ஏகப்பட்ட ரசிகைகள் அவர் மீது கண் வைத்து வருகின்றனர்.