ச்சீ.. டைனிங் டேபிளில்.. எல்லோர் முன்னிலையிலும் ஷிவானியை மடியில் சாய்த்த பாலா.. கடுப்பான சனம்!

சென்னை: டைனிங் டேபிளில் ஷிவானி மேல கை போட்ட பாலா, சட்டென அவரை மடியில் சாய்த்துக் கொண்டது ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சியடைய செய்தது.

சனம் ஷெட்டிக்கும், பாலாவுக்கும் டைனிங் டேபிளில் கேப்டன் பதவிக்கும், அடுத்த வாரம் யார் ஜெயிலுக்கு போகணும் என்கிற சர்ச்சை வெடித்தது.

அந்த நேரத்தில் பாலா இப்படியொரு அசிங்கமான காரியத்தை எல்லோர் முன்னிலையிலும் பண்ண அதற்கு ஷிவானி சொன்ன ரீசன் ரசிகர்களை காரித் துப்ப வைத்துள்ளது.

கத்தியால குத்திடுவேன்

கத்தியால குத்திடுவேன்

கிச்சன் டீமில் இருந்து ஒருத்தரை மாற்ற வேண்டும் என நிஷாவின் சமையலை ரமேஷ், பாலா உள்ளிட்டோர் கலாய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அதற்கு ஆமாம் சாமி போடுவது போல ஷிவானி சவுண்டு விட்டதும், நிஷா அவருடன் ஜாலி சண்டை போட்டார். ஸ்பூனை வைத்துக் கொண்டு குத்திடுவேன் என நிஷா சொன்னதும், கத்தி அங்க இருக்குடி என ஷிவானி கலாய்க்க, உனக்கெல்லாம் ஸ்பூன் போதும் டி என நிஷா வெளுத்தெடுத்தார்.

சனமை வம்புக்கு இழுத்த பாலா

சனமை வம்புக்கு இழுத்த பாலா

அடுத்த வாரம் சனம் தான் கேப்டன் எனக் கூறி சனம் ஷெட்டியை டைனிங் டேபிளில் வம்புக்கு இழுத்தார் பாலா. உடனே நான் எப்படி ஆக முடியும் என சனம் விளையாட்டா சொல்ல, ரமேஷ் சும்மா இல்லாமல் அப்போ ஜெயிலுக்கு போகட்டும் என்றார்.

நீ போ ஜெயிலுக்கு

நீ போ ஜெயிலுக்கு

பாலாவும் சனமை வெறுப்பேற்ற நீங்க ஜெயிலுக்கு போங்க என்றதும், நான் ஏன் போகணும், நீ போ ஜெயிலுக்கு என பாலாஜி பேச பிக் பாஸ் வீடு காரசாரமானது. கடுப்பான சனம் ஷெட்டியை மேலும், கடுப்பேற்ற பக்கத்தில் இருந்த ஷிவானி நாராயணனை தடவ ஆரம்பித்தார் பாலாஜி முருகதாஸ்.

மேல கை போட்டு

மேல கை போட்டு

சனம் ஷெட்டையை வெறுப்பேற்றுவதற்காக அருகில் இருந்த ஷிவானி நாராயணன் மீது கை போட்டார் பாலாஜி முருகதாஸ். என்னடா நடக்குது இங்க என்கிற ரேஞ்சுக்கு சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் எல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஷிவானி கொஞ்சமும் விலகாமல், அப்படியே பாலாவுக்கு தன்னை விட்டுக் கொடுத்தார்.

மடியில் சாய்த்துக் கொண்டு

மடியில் சாய்த்துக் கொண்டு

ஜித்தன் ரமேஷ், ஆஜீத், சனம் ஷெட்டி என அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, ஷிவானியை சட்டென வளைத்து பிடித்து, தனது மடியில் சாய்த்துக் கொண்டார் பாலாஜி முருகதாஸ். உடனே கடுப்பான சனம் ஷெட்டி, இது ரொம்ப குழப்பமான ஃபேமிலி என தனது கோபத்தை சிரித்துக் கொண்டே வெளிப்படுத்தினார்.

அண்ணன் தங்கச்சியாம்

அண்ணன் தங்கச்சியாம்

பாலாஜி முருகதாஸ் மேல பித்துப் பிடித்துப் போய் இருக்கும் ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி கேட்டதற்கு விளக்கமாக, அண்ணன் தங்கச்சினா இப்படித் தான் இருக்கும் என அந்த உறவுக்கே களங்கம் விளைவிக்கும் விதமாக பேசியதை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகி உள்ளனர்.

ச்சீன்னு சொன்ன சனம்

ச்சீன்னு சொன்ன சனம்

இதுங்க ரெண்டு பேரும் பப்ளிக்கா பண்ணுகிற அலப்பறையை பார்த்தும் பார்க்காமலும் ஆஜீத்தும் ரமேஷும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினர். சம்யுக்தா அப்படியே சத்தம் காட்டாமல் நகர்ந்து சென்றார். சனம் ஷெட்டி பொறுக்க முடியாமல் ச்சீன்னு திட்டிவிட்டார். உடனே, ஷிவானி பாலாவை சனம் ச்சீன்னு திட்டிட்டாங்க, இதை வச்சி இந்த வாரம் சண்டை ஆரம்பிக்கலாம் என கிண்டலாக பேசியது எல்லாம் ரொம்பவே ஓவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X