அனிதாவிடம் டபுள் மீனிங்கில் பேசிய பாலா.. கடுப்பாகும் பிக் பாஸ் ரசிகர்கள்.. கமல் கண்டிப்பாரா?

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 3வது வாரத்தை வெற்றிகரமாக முடிக்கப் போகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் என பிக் பாஸே அறிவித்த நிலையில், ரசிகர்கள் யார் அந்த இருவர் என ஏகப்பட்ட கணிப்புகளை கணித்து வருகின்றனர்.

இந்நிலையில், வின்டேஜ் கல்லூரி கெட்டப்பிற்கு மாறியுள்ள பிக் பாஸ் போட்டியாளர்கள் டபுள் மீனிங்கில் பேசி வருவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தாத்தா போயிட்டாரு

தாத்தா போயிட்டாரு

சுரேஷ் சக்கரவர்த்தி இருந்தவரை போட்டியாளர்களிடம் எல்லை மீறிய பேச்சுக்களையும் அசிங்கமான வார்த்தைகளையும் பேசினார் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில், அவர் வெளியேறிய பின்னர் இன்னமும் பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் திருந்தியதாக தெரியவில்லை. அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பேச்சுக்கள் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கின்றன.

ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்

இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்கள், எல்லை மீறி நடந்துகொள்வதாக ரசிகர்கள் எண்ணுகின்றனர். அதற்கேற்றாற்போல் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் கேலி கிண்டலுக்கு என்று இரட்டை அர்த்தம் இருக்கும் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதயம் முரளி கல்லூரி

இதயம் முரளி கல்லூரி

பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் 80-களில் இருக்கும் கதாநாயகன் கதாநாயகியை போல் தங்களை மாற்றிக் கொண்டிருக்கும் அல்டிமேட் போட்டியாளர்கள் இதயம் முரளி கல்லூரி வகுப்பறையில் பாடம் படிப்பது போல் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தான் இரட்டை அர்த்த வசனங்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாண்டவமாடுகின்றன.

அனிதா டீச்சருக்கு லவ் லெட்டர்

அனிதா டீச்சருக்கு லவ் லெட்டர்

இதயம் முரளி கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் அனிதாவிற்கு மாணவர் நிரூப் காதல் கடிதம் எழுதுகிறார். இந்த காதலை ஏற்க மறுத்த அனிதா, 'இவன் இருக்கிற உயரத்திற்கு எனக்கு லவ் லெட்டர் கொடுக்கிறான்' என்று பாலாவிடம் முறையிடுகிறார். அதற்கு பாலா பேசிய வார்த்தைகள் டபுள் மீனிங் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

டபுள் மீனிங்கில் பாலா

டபுள் மீனிங்கில் பாலா

அனிதா சம்பத் புலம்பியதும் அதற்கு பதிலளித்த பாலா, 'அவன் உங்க உயரத்திற்கு முழங்கால் போட்டுக் கொள்வான்' என்று இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட் அடிக்கிறான். இவ்வாறு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜோக் என்ற பெயரில் ஏ ஜோக்குகள் அதிகளவில் இடம்பெற ஆரம்பித்துள்ளன.

பாலா படித்த கடிதம்

பாலா படித்த கடிதம்

இதைவிட பாலாஜி முருகதாஸ் தாடி பாலாஜியின் மண்டை மற்றும் கேப் விட்டு கொண்டை என படித்த கடிதம் அப்பட்டமாக ஆபாச டபுள் மீனிங்காக உள்ளதாக நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸை திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த சீசனிலும் பாலாவுக்கு எப்படி பேசுவது என்பது தெரியவில்லை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

கமல் கண்டிப்பாரா

கமல் கண்டிப்பாரா

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட 24 மணி நேரம் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருவதால், போட்டியாளர்கள் தான் எப்படி பேச வேண்டும் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும். இஷ்டத்துக்கு நாம் பேசினால் எடிட்டர் பார்த்துக் கொள்வார் என பேசிவிட்டால், எந்த நேரத்தில் எந்த ரசிகர் பார்த்தாலும் சமூக வலைதளங்களில் கிழித்துத் தொங்க விட்டு விடுகின்றனர். இந்த பிரச்சனையை கமல் கையில் எடுத்து கண்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X