For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அப்பாவும் அம்மாவும் ஆல்கஹாலிக்.. பாகுபலி பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில இப்படியொரு சோகக் கதை இருக்கா?

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் 5ம் நாள் 3வது புரமோ தற்போது வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

  Balaji Murugadoss அப்பாவும் அம்மாவும் Alcoholic • பாகுபலிக்கு இப்படி ஒரு கதை

  பாகுபலி என ஹவுஸ்மேட்ஸ்களால் அழைக்கப்படும் பாலாஜி முருகதாஸ், தனது வாழ்க்கை முழுவதும் அனுபவித்த வலிகளை ஷேர் செய்து ஒட்டுமொத்த போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களையும் அழ வைத்துள்ளார்.

  குடிக்கு அடிமையான பெற்றோர்களின் கதையை மனம் திறந்து கூறியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

  அனிதா.. வனிதா.. பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமில்ல.. உள்ளே இந்த பிரபலமும் இப்படித் தான் கலாய்க்கிறாரு!

  சண்டை புரமோ

  சண்டை புரமோ

  நடிகை ரேகாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே நடக்கும் சண்டையை ஹைலைட் பண்ணி இன்றைய முதல் புரமோவில் வெளியிட்டனர். சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா சம்பத்தை கொஞ்சம் ஓரங்கட்டி உள்ளனர். சமாதானம் செய்ய வந்த தலைவி ரம்யா பாண்டியனையும் டென்ஷன் ஆக்கி விட்டுட்டாங்க.

  அடுத்த எவிக்‌ஷன் லிஸ்ட்

  அடுத்த எவிக்‌ஷன் லிஸ்ட்

  இரண்டாவது புரமோவில் சம்யுக்தா மற்ற 8 போட்டியாளர்களில் எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட அடுத்த 4 போட்டியாளர்கள் யார் என்கிற விவரத்தை கூறுகிறார். அதை பார்த்த ரசிகர்கள், என்னடா இரண்டாம் வாரத்தில் இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்றே தெரியாமல், ஒரே குழப்பத்தில் ஆழ்ந்து விட்டனர்.

  யார் அந்த 4 பேர்

  யார் அந்த 4 பேர்

  முதல் வார தலைவி ரம்யா பாண்டியன், எதிர்பார்த்தது போல செல்லக்குட்டி ஷிவானி நாராயணன், சூப்பர் சிங்கர் ஆஜீத் மற்றும் எதிர்பார்க்காத மொட்டை தல சுரேஷ் ஆகிய 4 பேரின் கதைகளும் சிறப்பாக இல்லை என சம்யுக்தா விளக்கம் கொடுத்து எவிக்‌ஷனுக்கு அனுப்பும் அசத்தல் புரமோ வெளியானது.

  பாலாஜி முருகதாஸின் கண்ணீர் கதை

  பாலாஜி முருகதாஸின் கண்ணீர் கதை

  ஜாலியா மற்றவர்களை வம்பிழுத்துக் கொண்டு சுற்றித் திரியும் பாலாஜி முருகதாஸ் அப்படி என்ன கதை சொல்லி இதில் இருந்து தப்பித்தார் என நெட்டிசன்கள் 2வது புரமோவை பார்த்து கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவை பார்த்தால் பாலாஜி முருகதாஸின் கண்ணீர் கதை நிச்சயம் ரசிகர்களையும் அழ வைத்து விடும்.

  அப்பாவும் அம்மாவும் ஆல்கஹாலிக்

  அப்பாவும் அம்மாவும் ஆல்கஹாலிக்

  சின்ன வயசுல ஸ்கூல்ல சேர்த்துவிட்டதோட அவ்ளோ தான், எந்த பேரன்ட்ஸ் மீட்டிங், ஃபங்ஷன் என எதுக்குமே வர மாட்டாங்க.. ஒரு நாள் நைட் தூக்கத்துல தலை வலிச்ச மாதிரி இருந்துச்சு, அப்பா கையில கேஸ் டியூப் வச்சிருந்தார்.. அப்போதான் தெரிஞ்சது குடி போதையில என்ன அடிச்சிருக்காருன்னு.. அப்பா கூட சேர்ந்து அம்மாவும் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கு அடிமை ஆகிட்டாங்க..

  அப்புறம் ஏன் பெத்துக்குறீங்க

  அப்புறம் ஏன் பெத்துக்குறீங்க

  உங்களால குழந்தையை பெத்து வழக்க முடியலைன்னா நீங்க எல்லாம் குழந்தை பெத்து என்ன பண்ண போறீங்க என தனது சோகமான கதையை பாலாஜி முருகதாஸ், கூற, ரியோ ராஜ், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட ஹவுஸ் மேட்ஸ் அவரை கட்டித் தழுவி ஆறுதல் சொன்னார்கள். இதனால் தான் பாலாஜி முருகதாஸ் எவிக்‌ஷனுக்கு தேர்வாகவில்லை.

  English summary
  Balaji Murugadoss share his heart touching real life story in Bigg Boss house. Clips of the story came as a promo 3 of Day 5.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X