ஆரி கப் ஜெயிச்சா ஒத்துக்க மாட்டேன்.. ஆஜீத் கிட்ட அப்படி.. ஷிவானிக்கிட்ட இப்படி.. பாலா இஸ் பேக்!
சென்னை: நானோ, ஆரியோ கப் ஜெயிச்சா நல்லா இருக்கும் என ஆஜீத்திடம் சொன்ன பாலா, இந்த வீட்டிலேயே ஆரி கப் ஜெயிச்சா நான் ஒத்துக்க மாட்டேன் என ஷிவானியிடம் மீண்டும் கடலை போட்டு, பழைய பயில்வானாக மாறிவிட்டார்.
பிக் பாஸ் வீட்டுக்கு வந்த அத்தனை குடும்பங்களும் ஆரியை மதித்து பேசியது பாலாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
ஆரி தன்னுடைய குழந்தையை பாலாவுக்கு முத்தம் எல்லாம் கொடுக்க வைத்து சிரித்து மகிழ்ந்த நிலையில், பாலா ஏன் இன்னும் வஞ்சகத்தோடு இருக்கிறார் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மூன்று நாள் தான்
ஆஜீத்தோட அம்மா வந்து பேசிவிட்டு செல்லும் போது, இன்னும் மூன்று நாள் தான் இந்த வாரம் வெளியே வந்துடுவ, அப்படி இல்லைன்னா நல்லா விளையாடு என சொல்லிவிட்டு சென்றதை பாலாவிடம் பகிர்ந்து கொண்டு புலம்பினார் ஆஜீத். அவரை சமாதானம் படுத்தாமல் உடனடியாக தனது பெருமையை பேச ஆரம்பித்து விட்டார் பாலா.

நான் ஜெயிச்சேனா
இந்த பிக் பாஸ் டைட்டிலை நான் ஜெயிச்சேனா டிரெண்ட் செட்டிங்கா இருக்கும் இதுக்கு முன்னாடி ஜெயிச்சவங்களாம், சும்மா கடலை சாப்பிட்டுக்கிட்டே ஜெயிச்சாங்க என கடந்த மூன்று சீசன்களின் டைட்டில் வின்னர்களையும் அதை தேர்வு செய்த பிக் பாஸ் குழுவையும் மீண்டும் விமர்சித்துள்ளார் பாலா.

ரியோ, சோம் ஒத்துக்கமாட்டேன்
இந்த சீசன் பிக் பாஸ் டைட்டிலை ரியோ ஜெயிச்சாலும் ஒத்துக்க மாட்டேன். சோம் ஜெயிச்சாலும் ஒத்துக்க மாட்டேன். ரெண்டு பேரும் கடலை தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க, இறங்கி விளையாடுறவங்க ஜெயிச்சா தான் அடுத்த சீசன் வரவங்க ஆரம்பத்தில் இருந்தே சைலன்ட்டா இல்லாமல் இறங்கி விளையாடுவாங்க என்றார்.

நானோ ஆரியோ
நானோ இல்லை ஆரியோ ஜெயிச்சா கூட பரவாயில்லை. கேம் வேற லெவலில் இருக்கும் அடுத்த வருஷம் பிக் பாஸ் ஆரம்பத்தில் இருந்தே கலவர பூமியாக இருக்கும் என ஆஜீத்திடம் தனக்கு சப்போர்ட் செய்யக் கூறி மறைமுகமாக பேச ஆரம்பித்தார் பாலாஜி முருகதாஸ்.

மீண்டும் ஷிவானியுடன்
ஷிவானி அம்மா வந்து விட்டு போனதில் இருந்து ஷிவானி பக்கம் தலை வைத்தே பார்க்காமல் இருந்த பாலாஜி முருகதாஸ், ஃப்ரீஸ் டாஸ்க் முடிந்ததும் மீண்டும் ஷிவானியுடன் அதுவும் அதிகாலை 2 மணிக்கு தனியாக கடலை போட்டுக் கொண்டு இருக்கிறார். ஷிவானி அம்மா அப்படி திட்டியும் அவருக்கு இன்னமும் புத்தி வரவில்லை என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

ரம்யா வேஸ்ட்
இந்த கேம்ல ரம்யாலாம் கப் அடிச்சா அது வேஸ்ட். ஆரி ப்ரோ தினமும் நிறைய பேர் கிட்ட படத்துக்கான ஸ்க்ரிப்ட் கேட்பவர். அதனால, அவருக்கு ரொம்ப பொறுமை இருக்கு. எனக்கோ, உனக்கோ அது இல்லை. இந்த பிக் பாஸ் கேமை எப்படி விளையாடணும்னு தெரிஞ்சுட்டு ஆடுற ஒரே ஆள் அவர் தான்.

நேர்மை இல்லை
ஆனால், அவரை நேர்மையானவர்னு மத்தவங்க சொல்றது, வெளியில தெரிவது எதையும் நான் ஒத்துக்க மாட்டேன். அவர் எப்படி ஏமாத்தி விளையாடுறார் என்பது எல்லாம் ரெட் பால் டாஸ்க்கின் போதே தெரிந்து விட்டது. பல முறை நான் அவரை எதிர்த்து பேசவில்லை என்றால், வெளியே நான்லாம் எப்படி தெரிஞ்சிருப்பேன்னே தெரியல என ஷிவானியிடம் அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டார்.

ஆரியை தவிர
ஆஜீத்திடம் ரியோ, சோமசேகர் டைட்டிலுக்கு தகுதியில்லை என்றும், ஷிவானியிடம் ரம்யா டைட்டிலுக்கு தகுதியில்லை என்றும் கூறிவிட்டு, கடைசியில், இந்த வீட்ல யாரு டைட்டில் வின் பண்ணாக் கூட பரவாயில்லை.. ஆனால், ஆரி டைட்டில் வின் பண்ணா நான் ஒத்துக்க மாட்டேன். கமல் சாரே சொன்னாலும், அவர் கிட்ட நான் கேட்பேன் என பச்சோந்தியாக மாறி பாலா பேசியதை சமூக வலைதளத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் வெளுத்து வருகின்றனர்.

பாலா இஸ் பேக்
இப்போ தான் பழைய பயில்வான் திரும்ப வந்திருக்கார். சீக்கிரமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போயிடுவார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். ஆரி தன்னுடைய குழந்தையை தூக்கி பாலாவிடம் கொடுத்தும், அவருக்கு முத்தம் கொடுக்க சொல்லியும் அன்போடு இருக்கும் நிலையில், ஆரி பற்றி பாலாவும், ரியோவும் மாற்றி மாற்றி தனிமையில் தனது டீம் உடன் பேசிக் கொள்வது அவர்களுக்கே பேக் ஃபயர் ஆகிடும் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications











