பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் பகிர்ந்த .. அரியப் புகைப்படம் வைரலாகிறது !

சென்னை : பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருபவர் பாலாஜி முருகதாஸ்.

Recommended Video

Bigg Boss 4 Tamil அத போட மறந்துட்டீயே Ajeedh • Day 10 | 14th October

கடந்து வந்த பாதை டாஸ்க்கில் இவர் கூறிய கதையைக் கேட்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பலரும் கண்ணீர் வடித்த நிலையில் இவருக்கான ரசிகர் கூட்டமும் கணிசமாக உயர்ந்தது.

இந்நிலையில் மது அருந்தியவாறு இருக்கும் இவரது சர்ச்சைக்குரிய சில புகைப்படங்கள் சமீப நாட்களாக வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்பொழுது பாலாஜி முருகதாஸ் தனது அம்மா அப்பாவுடன் சிறுவயதில் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சரியான அங்கீகாரம்

சரியான அங்கீகாரம்

தமிழ்நாடு.மற்றும் இந்தியா சார்பில் பல்வேறு மாடலிங் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக் கோப்பையுடன் வலம் வந்த பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து இருக்கும் நிலையில், சரியான அங்கீகாரம் கிடைக்காததால் இப்பொழுது பிக் பாஸ் சீசன் 4ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி அதிரடி காட்டி வருகிறார்.

துணிச்சலான பேச்சு

துணிச்சலான பேச்சு

கட்டுடல் மேனி, துணிச்சலான பேச்சு என ஆரம்பம் முதலே ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து வந்த பாலாஜி முருகதாஸ் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் பல போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த கடினமான சூழ்நிலைகளை பகிர்ந்து கொண்டதை அடுத்து, இவரும் தனது வாழ்க்கையில் யாரும் அறியாத மறுபக்கத்தை கூறி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தார்.

மதுவில் குளிக்கின்றவாறு

மதுவில் குளிக்கின்றவாறு

கடந்து வந்த பாதை டாஸ்க்குக்கு பிறகு இவருக்கான ரசிகர் கூட்டம் கணிசமாக உயர்ந்த நிலையில் இவரைப் பற்றிய பல்வேறு மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. மக்கள் மத்தியில் பாலாஜிக்கு பெருகிய ஆதரவு ஓரிரு நாட்களிலேயே தகர்க்கும் வகையில் மதுவில் குளிக்கின்றவாறு வெளியிட்டிருந்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சர்ச்சைக்குள்ளானது.

அனைவரையும் ஆச்சரியப்பட

அனைவரையும் ஆச்சரியப்பட

அதுமட்டுமல்லாமல் பாலாஜியை நன்கு அறிந்தவர்கள் இவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிலையில் இப்பொழுது மீண்டும் பாலாஜி முருகதாஸின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

க்யூட்டான பேமிலி புகைப்படங்கள்

க்யூட்டான பேமிலி புகைப்படங்கள்

சிறு வயதில் தனது அம்மா மற்றும் அப்பா உடன் யாரும் பார்த்திராத அறியப் புகைப்படங்களை பாலாஜி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்க்கு முன்பு பகிர்ந்திருந்த நிலையில் அந்த க்யூட்டான பேமிலி புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X