ஏன் பதறுறீங்க.. ரொம்ப பண்ணீங்கனா மறுபடியும் போய் படுத்துப்பேன்.. ஹவுஸ்மேட்ஸை மிரட்டிய பாலா!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் பாலாவை போட்டியாளராக சேர்த்துக் கொண்டு பிக் பாஸ் படும் அவஸ்த்தை இருக்கே ரொம்பவே பாவம்.

எந்த ஒரு டாஸ்க்கையும் சீரியஸா எடுத்துக்காமல் போனா போகுது, வந்தா வரட்டும் என இஷ்டத்துக்கு விளையாடி வருகிறார்.

சரியான நேரத்துக்கு எழுந்து சென்று மணிக் கூண்டில் ஏறி நிற்காமல் பதறவிட்டு, படுத்தும் தூங்குவேன் என மிரட்டுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.

ரொம்பவே சோம்பேறி

ரொம்பவே சோம்பேறி

எப்போ பார்த்தாலும், பிக் பாஸ் வீட்டில் தூங்கி வழிவதையே வேலையாக கொண்டு இருக்கிறார் பாலாஜி முருகதாஸ். வேலை செய்ய சொன்னாலும் தூக்கம், டாஸ்க் செய்ய சொன்னாலும் தூக்கம். இப்படி ரொம்பவே சோம்பேறியாக இருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

பெருக்குவதில் சண்டை

பெருக்குவதில் சண்டை

ஏற்கனவே வேல்முருகன் கேப்டனாக இருக்கும் போது, பிக் பாஸ் வீட்டை பெருக்க சொல்லும் போது, தன்னால் முடியாது தூங்குறேன் என பாலா சொன்னதுக்குத் தான் அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் அப்படியொரு சண்டை நடந்தது. பின்னர், இருவரும் அம்மா பிள்ளை என கொஞ்சி கொண்டது வேறு கதை.

லக்சரி பட்ஜெட் போச்சு

லக்சரி பட்ஜெட் போச்சு

பாலா மைக்கை சரியாக மாட்டாமல் இருந்த காரணத்திற்காக லக்சரி பட்ஜெட்டில் கை வைத்த பிக் பாஸ், கடந்த வாரம் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கை சரியாக விளையாடாத காரணத்திற்காக மொத்த லக்சரி பட்ஜெட்டையும் பிடுங்கிக் கொண்டார். எல்லாத்துக்கும் பாலா தான் காரணம் என ஹவுஸ்மேட்கள் அவர் மீது பாயத் தொடங்கினர்.

ஏன் பதறுறீங்க

ஏன் பதறுறீங்க

அனிதா சம்பத் வந்து, பாலா எங்க டீம் பண்ணிட்டோம். உங்க டீம்ல இரண்டு பேர் டாஸ்க் பண்ணிட்டு இருக்காங்க, நீங்க உடனே எழுந்து போகணும் என சொன்னதும், ஏன் பதறுறீங்க, இப்படி எல்லாம் ஃபோர்ஸ் பண்ணா மறுபடியும் போய் படுத்து தூங்கிடுவேன் என மிரட்டினார். நிஷா, நீ எப்போ வேணா வா என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

அய்யோ போயிடுமே

அய்யோ போயிடுமே

பாலாஜி முருகதாஸ் டீமில் உள்ள சனம் ஷெட்டி, ரம்யா மற்றும் சுசித்ரா மணிக்கூண்டு டாஸ்க் செய்தனர். சனம் ஷெட்டி, 5 நிமிஷம் லேட்டா ஆனால், அய்யோ லக்சரி பட்ஜெட் போயிடுமே என ரொம்பவே ஃபீல் பண்ணார். ஆனால், ஒரு நபருக்கு 15 நிமிடம் வரை கிரேஸ் பீரியட் இருக்கு என்பதை புரிந்து வைத்துக் கொண்ட பாலா தாமாதமாக வந்து கலந்து கொண்டார்.

Recommended Video

பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
பொய்யான கணக்கு

பொய்யான கணக்கு

மத்த டீம் எல்லாம் 3 மணி நேரத்தை கணிக்க, மூன்று மணி நேரத்துக்கு மேல் எடுத்துக் கொண்ட நிலையில், பாலா தப்பான ஆட்டம் ஆடி, 2.30 மணி நேரத்தில் 3 மணி நேரம் ஆகி விட்டது என வேண்டுமென்றே ஸ்பீடாக எண்ணி மோசமான ஆட்டத்தை ஆடி வருகிறார். பாலா பண்ணும் அட்டூழியங்களுக்கு சீக்கிரமே பிக் பாஸ் ஒரு பெரிய ஆப்பாக வைத்து வெளியே அனுப்ப போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X