twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வீட்ல எந்த பெண்ணையும் மதிச்சது இல்லை.. வெளிப்படையா பேசுன பாலாஜி.. என்ன விஷயம் தெரியுமா?

    |

    சென்னை: பெண்களை பெருமைப்படுத்தும் நவராத்திரி பண்டிகை பிக் பாஸ் வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 8 பெண்களை அமர வைத்து விட்டு, அங்குள்ள 8 ஆண்களையும் விட்டு பெண்கள் பற்றி சிறப்பாக பேச சொன்னார்கள்.

    ஆஜீத், ஆரி, சுரேஷ் தாத்தா, ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், வேல்முருகன், சோமசேகர் மற்றும் பாலாஜி என அனைவரும் பெண்களை பற்றி பெருமையாக பேசினார்கள்.

    பாலாஜி பேசும் போது, இந்த வீட்ல நான் எந்த பெண்ணையும் மதிச்சது இல்லை என்றார்.

    ஆத்தா வந்துட்டாடா.. மொட்டை தாத்தா வயித்துலயே மிதிச்ச அர்ச்சனா.. நவராத்திரி நாடகம் வேற லெவல்!ஆத்தா வந்துட்டாடா.. மொட்டை தாத்தா வயித்துலயே மிதிச்ச அர்ச்சனா.. நவராத்திரி நாடகம் வேற லெவல்!

    பெண்களின் பெருமைகள்

    பெண்களின் பெருமைகள்

    பெண்களை பெருமைப்படுத்தும் நவராத்திரி பண்டிகை பிக் பாஸ் வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 8 பெண் போட்டியாளர்களும் செம அழகாக கொலு பொம்மைகளை விட நல்லாவே மேக்கப் பண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள் பெண்களின் பெருமைகளை எடுத்து உரைத்தனர்.

    அப்படியே மாறிய அர்ச்சனா முகம்

    அப்படியே மாறிய அர்ச்சனா முகம்

    ஆஜீத், ஆரி, சுரேஷ் தாத்தா, ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், வேல்முருகன், சோமசேகர் எல்லாம் பெண்கள் பற்றியும், பிக் பாஸ் வீட்டு பெண் போட்டியாளர்கள் பற்றியும் நல்லாவே பேசினார்கள். ஆனால், பாலாஜி பெண்களை பற்றி பேச வந்து நின்றதும் அர்ச்சனாவின் முகம் அப்படியே மாறியது.

    சக போட்டியாளர்கள்

    சக போட்டியாளர்கள்

    பெண்கள் பற்றி பேசத் தொடங்கிய பாலாஜி முருகதாஸ், இந்த வீட்டில் இருக்கும் எட்டு பெண்களும் என்னோட சக போட்டியாளர்கள். புடிச்சிருக்கோ புடிக்கலையோ, புடிக்குமோ புடிக்காதோ, ஒருத்தங்க சாப்பிட்டாங்களோ இல்லையோ, அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ என அர்ச்சனா பற்றி பேச ஆரம்பித்தார்.

    மதிச்சதே இல்லை

    மதிச்சதே இல்லை

    ஆனால், அர்ச்சனாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரை பற்றி பேசிய பாலாஜி, எல்லா பெண்களும் இங்குள்ள ஆண்களை சரி சமமாகவே நடத்துகின்றனர். ஆனால், நான் எந்த பெண்ணையும் இங்க மதிச்சதே இல்லை என வெளிப்படையாக போட்டுடைத்தார். அதுதான் பெண்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.

    அந்த குவாலிட்டியை வளர்க்கணும்

    அந்த குவாலிட்டியை வளர்க்கணும்

    பெண்களுக்கு இருக்கும் அந்த அற்புதமான குவாலிட்டியை நான் வளர்த்துக்கணும்னு நினைக்கிறேன். கண்டிப்பா சீக்கிரமே வளர்த்துப்பேன் என்றார். அனிதா, அர்ச்சனா, சம்யுக்தா, ரம்யா, ஷிவானி, கேபி எல்லாமே பாலாஜி முருகதாஸ் அப்படி வெளிப்படையாக பேசியதை வெகுவாக ரசித்தனர்.

    உலகத்தையே மாற்றும் சக்தி தாய்மை

    உலகத்தையே மாற்றும் சக்தி தாய்மை

    எந்த ஒரு ஆணிடமும் இல்லாத ஒரு விஷயம் பெண்கள் கிட்ட இருப்பது என்றால் அது தாய்மை. அது ரொம்ப சக்தி வாய்ந்த ஒன்று, அது எந்த ஒரு ஆணையும் மாத்தும், சமுதாயத்தையும் மாத்தும் இந்த உலகத்தையும் மாத்தும் அதை பார்த்து நான் ரொம்ப admire பண்றேன் என்றார். நல்லா டஃப் கொடுக்குறீங்க, நாங்களும் டஃப் கொடுப்போம் என கடைசியா பஞ்ச் ஒன்றும் கொடுத்து பாலா தனது பேச்சை முடித்தார்.

    English summary
    Balaji Murugadoss talks about Women power will change the world and change everything. And also he said, these 8 powerful women are my co contestant and gave tough competition to me I admire it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X