எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக ஸ்டோரி ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

தான் வெற்றி பெற்ற போதும் எந்த மீடியாவும் தன்னை கவனிக்கவில்லை என்று கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

டபுள் கேம் ஆடிய பாலா

டபுள் கேம் ஆடிய பாலா

தனது நெகட்டிவ் பிஹேவிங்கால் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகி விட்டார். தான் வின்னராக வேண்டும் என்ற எண்ணத்தில் டபுள் கேம் ஆடி, ஒவ்வொரு போட்டியாளராய் காலி செய்தார்.

மக்கள் வெறுக்கும் வகையில்

மக்கள் வெறுக்கும் வகையில்

கூடவே இருந்து குழிப்பறிப்பது, முதுகில் குத்துவது என மக்கள் வெறுக்கும் வகையில் நடந்து கொண்டார். ஆரி மற்றும் சனம் ஷெட்டியிடம் ரொம்பவே கோபமாகவும் ரூடாகவும் தரக்குறைவாகவும் நடந்து கொண்டார்.

பெண் என்றும் பாராமல்

பெண் என்றும் பாராமல்

சனம் ஷெட்டியை பெண் என்றும் பாராமல் தருதலை என்று அழைத்த பாலாஜி, வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவளே இவளே என்றும் பேசினார். மேலும் சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் பட்டத்தை வென்றார் என்றும் கூறினார்.

ரெட் கார் கொடுங்கள்

ரெட் கார் கொடுங்கள்

இதனால் பெரும் சர்ச்சைக்குள்ளானார் பாலாஜி. பாலாஜியின் பேச்சால் கடுப்பான ரசிகர்கள் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என கூறி வந்தனர். இதேபோல் ஆரியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார் பாலாஜி.

ஆரியை அடிப்பது போல்..

ஆரியை அடிப்பது போல்..

காலை நீட்டி பேசியது, போ வா என்று பேசியது, ஆரிக்கு எதிராய் மற்றவர்களை தூண்டிவிட்டது என தனது ஸ்டைலில் ஆட்டத்தை ஆடி மக்களின் கோபத்திற்கு ஆளானார். மேலும் ஆரியை தரக்குறைவாக பேசி அடிப்பது போல் பாய்ந்தார்.

ரன்னர் அப் பாலா

ரன்னர் அப் பாலா

இதனால் அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் ஆனார் பாலாஜி.

இன்னும் தீவிரமாய்

இன்னும் தீவிரமாய்

ஃபினாலே மேடையில் பேசிய அவர், இப்படி விளையாடியே இரண்டாவது இடம் வரும் என்று தெரிந்திருந்தால், இன்னும் தீவிரமாக விளையாடியிருப்பேன் என்றார். இதனைக் கேட்ட ரசிகர்கள் இதற்காகதான் உங்களை வெளியேற்ற கூறினோம் என்று கூறிவந்தனர்.

எனக்கா ரெட் கார்டு..

எனக்கா ரெட் கார்டு..

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் பாலாஜி முருகதாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில் எனக்கா ரெட் கார்டு.. என்று கேட்டுள்ள பாலாஜி, தன்னைத்தானே ஸ்ட்ரேட்டஜிக் கிங் ஆஃப் பிக்பாஸ் தமிழ் என குறிப்பிட்டுள்ளார்.

நிறைய நம்பிக்கை துரோகங்கள்..

நிறைய நம்பிக்கை துரோகங்கள்..

மேலும் ஹே மச்சாஸ்.. தம்பி.. சிஸ்டர்ஸ்.. இது பாலா.. ரொம்ப நன்றி மச்சாஸ் லவ் யூ ஆல் டா.. நான் உள்ளே இருந்த போது என்னுடைய நண்பர்கள் மற்றும் நெருக்கமான வட்டத்தில் இருந்து நிறைய நம்பிக்கை துரோகங்கள்.. ஆனால் எனக்காக பில்லர் போன்று நின்றீர்கள்..

Recommended Video

Suresh தாத்தாவை Agreement காட்டி மிரட்டினார்களா? குழப்பும் Tweet
கொண்டாடினேன்..

கொண்டாடினேன்..

எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.. வருத்தம் இல்லை.. மனதில் தோன்றியதை விளையாடினேன்.. இந்த 105 நாட்களை கொண்டாடினேன்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 4லேயே அதிக சர்ச்சைக்குள்ளான ஒரு பிரபலம் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X