ஷிவானியை நான் லவ் பண்ணல.. என்ன அர்ச்சனா மம்மியிடம் இப்படி சொல்லிட்டாரே பாலா? எங்க அந்த எடிட்டர்!
சென்னை: அண்ணன் தங்கையாக பழகிய பாலாஜிக்கும் ஷிவானிக்குமே லவ் மியூசிக் போட்டு கனெக்ஷன் கொடுக்க நினைத்த பிக் பாஸ் எடிட்டர், படுக்கை அறையில் ஊட்டி விடும் பாலாவையும் ஷிவானியையும் சும்மாவா விடுவார்?
பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணனை வைத்துத் தான் இந்த பிக் பாஸ் 4வது சீசனை ஓட்ட வேண்டும் என மனக் கணக்கு போட்டு ஏகப்பட்ட லவ் பிஜிஎம்களை இறக்கி வந்த பிக் பாஸ் எடிட்டரின் தலையில் நறுக்கென ஒரு குட்டு விழுந்து இருக்கிறது.
பாலா, ஷிவானி ரிலேஷன்ஷிப்புக்கு அர்ச்சனா நல்ல ஒரு வேட்டு வச்சிட்டாங்கன்னு ஷிவானி ஆர்மியினர் ரொம்பவே சந்தோஷம் அடைந்துள்ளனர்.

ஒரே ஒரு பொண்ணு சுத்துது
பாடி காட்டும் பயில்வானாக இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாலாஜி முருகதாஸை பார்த்து ஏகப்பட்ட பெண்கள், இல்லை இல்லை ஒரே ஒரு பெண் சுத்துது என ரேடியோ ஸ்டேஷன் டாஸ்க்கில் சாடை மாடையாக அர்ச்சனா அக்கா பேசியதை புரிந்து கொண்ட பாலா, இது தொடர்பாக இறுதியாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தப்பா புரஜெக்ட் ஆகுது
பாலாவிடம் பேசிய அர்ச்சனா, உனக்கு வெளியே ஒரு இமேஜ் புரஜெக்ட் ஆகுது அது பிரச்சனை இல்லை. ஆனால், அந்த பொண்ணு ஷிவானிக்கு அந்த இமேஜ் புரஜெக்ட் ஆவது நல்லது இல்லை என ஓப்பனாக பாலாஜி முருகதாஸிடம் போட்டு உடைத்து விட்டார் அர்ச்சனா.

காதல் இல்லை
உடனே பாலாஜி முருகதாஸ், ஓப்பனா சொல்லப் போனா எனக்கு அவ மேல எந்த அட்ராக்ஷனும் இல்லை அதற்கு அர்த்தம் அது தானடா.. ஆம் எனக்குள் எந்தவொரு காதலும் இல்லை வெறும் எமோஷன்ஸ் மட்டும் தான் என பாலாஜி முருகதாஸ் அர்ச்சனாவிடம் சொன்னதை கேட்ட ஷிவானி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டனர்.

எல்லாமே நடிப்பா பாலா?
ஷிவானி வந்ததும் பேசிக் கொண்டிருந்த டாப்பிக்கில் அப்படியே மாறிய அர்ச்சனா, பிரிஸ்மா கான்செப்ட் நல்லா இருந்துச்சு பாலா என சம்பந்தமே இல்லாமல் பேசினார். பாலா, ஷிவானிக்கும் எனக்கும் எந்தவொரு அஃபெக்ஷனும் இல்லை எனக் கூறிய நிலையில், ஊட்டி விடும் அளவுக்கு சென்று விட்ட நிலையில், ஒன்றுமே இல்லை என சொல்வது எல்லாமே நடிப்பா பாலா? என்றே பிக் பாஸ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஷிவானியின் நிலைப்பாடு
பாலா ஷிவானியை லவ் பண்ணல என்பதில் உறுதியாக இருப்பது தெரிகிறது. ஆனால், பாலாவை சுற்றி பூனைக் குட்டி போல வரும் ஒரே ஒரு பொண்ணான ஷிவானிக்கு மனசுல என்ன இருக்கு? என்பது இன்னும் தெளிவாகவில்லை. அர்ச்சனா கேட்பதற்காக பாலா சும்மா பொய்யாக சொன்னாரா? என்பதும் தெரியவில்லை.

அம்மா இல்லை
மேலும், இது தொடர்பாக சுச்சி சொன்னதை ஷிவானியிடம் பேசி விட்டேன் என்று பாலா பளிச்சென அர்ச்சனாவிடம் சொன்னார். பின்னர், அர்ச்சனா தன்னிடம் பேசிய விஷயங்களை ஷிவானியிடம் பகிர்ந்து கொண்ட, பாலா, அவங்க எனக்கு அம்மா இல்லை என்றும், அவங்களை அப்படி நினைக்க வேண்டாம் என்றும் சொல்லப் போவதாக கூறியதை கேட்ட ரசிகர்கள், அர்ச்சனாவுக்கு இதை விட அவமானம் தேவையில்லை என்றே கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











