பிக் பாஸா? அல்லது பீப் பாஸா? கேள்வி கேட்ட பாலாஜி முருகதாஸ்.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் பிக் பாஸா? அல்லது பீப் பாஸா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பாலாஜி முருகதாஸ் பார்த்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏகப்பட்ட ட்வீட்களையும் அவர் தொடர்ந்து பதிவிட்டு சில விவாதங்களையும் கிளப்பி உள்ளார்.

ஏகப்பட்ட பீப்கள்
பாவனியும் தாமரையும் கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்த நிலையில், தற்போது சிபி மற்றும் நிரூப் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளை பிக் பாஸ் வீட்டில் பேசி நேற்றைய எபிசோடே பீப் எபிசோடாக மாறும் அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தரம் தாழ்ந்து கொண்டு சென்று விட்டனர்.

கமல் காரணமா
இதுவரை அன்பாக அமைதியாக ஆனந்தமாக இருந்த போட்டியாளர்களை நீங்கள் எல்லாம் நட்பு பாராட்ட இங்கு வரவில்லை. குழுவாக சேர்ந்து விளையாடினால் உங்கள் தனித் திறமை தெரியாமல் போய்விடும் என உசுப்பேற்றி விட்டு வீட்டையே ரணகளமாக மாற்றி விட்டார் கமல் என்கிற குற்றச்சாட்டுகளை நெட்டிசன்கள் அடுக்கி வருகின்றனர்.

பிக் பாஸா? பீப் பாஸா?
இந்நிலையில், கடந்த சீசனின் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் "Bigg boss or beep boss ?" என கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் பாலாஜி முருகதாஸ் அடிக்கடி பிக் பாஸ் குறித்த ட்வீட்களையும் பதிவிட்டு வருகிறார்.

உங்களையே மிஞ்சிட்டாங்க
பாலாஜி முருகதாஸின் இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் பேசாத வார்த்தைகளா? என்றும் இந்த சீசனில் உங்களையே மிஞ்சிட்டாங்க பாலா என்றும் அவரை கிண்டல் செய்து ஏகப்பட்ட கமெண்டுகளை போட்டு வருகின்றனர். பாலா ரசிகர்கள் அவர் ஒரு போதும் பீப் வார்த்தைகளை பயன்படுத்தியதே இல்லை என்றும் முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
Recommended Video

ரீ என்ட்ரி
சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் பதிவிட்டு உடனடியாக டெலிட் செய்த ரீ என்ட்ரி ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்க போகிறீர்களா பாலா என எதிர்பார்ப்புகளுடன் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், அது தொடர்பான எந்தவொரு விளக்கத்தையும் பாலா கொடுக்கவில்லை. லிப்ரா தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் பாலா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











