Fire: 10 வருட கடின உழைப்பு.. விடாமுயற்சி பாட்டுடன் பாலா.. சென்னையில் தியேட்டர்கள் அதிகரிப்பு!

சென்னை: ஃபயர் படத்தின் மூலம் தனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு ஒரு ஷோ மட்டுமே திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் இப்போ 4 ஷோக்கள் போடுகின்றன என பதிவிட்டுள்ளார். மேலும், சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த வீடியோ ஒன்றையும் விடாமுயற்சி பாடலை பிஜிஎம்மாக போட்டு வெளியிட்டுள்ள வீடியோ தீயாக பரவி வருகிறது.

அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் இந்த மாதம் 6ம் தேதி வெளியானது. தமிழில் அந்த வாரம் எந்த படங்களும் வெளியாகவில்லை. கடந்த வாரம் காதலர் தினத்தை முன்னிட்டு சுமார் 7 சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகின.

அந்த படங்களில் கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா உள்ளிட்ட எந்தவொரு படமும் ரசிகர்களை கொஞ்சம் கூட கவரவில்லை. ஆனால், பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்ட பலர் நடித்த ஃபயர் திரைப்படம் சற்றே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

1 கோடியை நெருங்கும் வசூல்: குறைந்த பொருட்செலவில் ஃபயர் படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். ஜே. சதீஷ் குமார். அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் அவரே நடித்திருந்தார். சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் தியேட்டரில் வசூல் அள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில், இதுவரை 70 லட்சத்திற்கு மேல் ஃபயர் திரைப்படம் வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். விரைவில் 1 கோடி வசூல் வரை தியேட்டரில் இந்த படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 வருட போராட்டம்: சினிமாவில் நடிகனாக வேண்டும் என கடந்த 10 வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து வந்ததற்கு இப்போதான் பலன் கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் நடிக்க கடும் முயற்சி செய்து வந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது என விடாமுயற்சி படத்தின் "பத்திக்கிச்சு" பாடலுடன் ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த அனுபவத்தையும் சந்தோஷத்தையும் ஷேர் செய்துள்ளார் பாலா.

Fire Balaji Murugadoss Rachitha Mahalakshmi

60 திரைகள் உயர்வு: ஆரம்பத்தில் வெறும் 15 திரைகளில் தான் சென்னையில் ஃபயர் படம் வெளியானது. ஆனால், தற்போது 60 திரைகளாக ஃபயர் படம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. படத்தில் நடித்த அனைவருக்கும் ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ். நாகர்கோயில் காசி இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கதையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் காசி கதாபாத்திரத்திலேயே பாலா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரச்சிதா மகாலட்சுமி உடன் அவர் கவர்ச்சி பொங்க நடித்த காட்சிகளை தாண்டி பெண்களுக்கான விழிப்புணர்வும் உள்ளதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.

அருண் விஜய்யுடன்: அடுத்து பாலாஜி முருகதாஸ் அருண் விஜய்யுடன் நடித்து வரும் ரெட்ட தல படமும் அவருக்கு இதைவிட நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்கின்றனர். பிக் பாஸ் 4வது சீசனில் கலந்துக் கொண்டு ரன்னர் அப்பான பாலாஜி முருகதாஸ் சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X