For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  3வது புரமோல அந்த சீன் கவனிச்சீங்களா? இன்னைக்கு இவர் தான் ஜெயிச்சு அவரை சேஃப் பண்ண போறாரு!

  |

  சென்னை: அப்பாடா.. ஒரு வழியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசிக்கல் டாஸ்க்குகள் ஆரம்பமாகிடுச்சு என ரசிகர்கள் சந்தோஷ பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

  பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் முதல் வாரம், சில பல சண்டைகளுடன், தொடங்கியது. ஆனால், ஒன்றும் பெரிய இம்பாக்ட் இல்லை.

  ஆனால், இரண்டாவது வார தொடக்கமே எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ், பிசிக்கல் டாஸ்க் என நிகழ்ச்சி ஹை ஸ்பீடில் செல்கிறது.

  முத்தையா முரளிதரன் போற்றத்தகுந்தவர்.. அவரது கதை சொல்லப்பட வேண்டும்.. புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!

  ஆஜீத் கிட்ட அலாவுதின் பூதம்

  ஆஜீத் கிட்ட அலாவுதின் பூதம்

  ஆஜீத் கிட்ட அலாவுதின் பூதம் சொல்லும் போதே ரைமிங்கா இல்ல.. இதுவரை இல்லாத பல புதிய விஷயங்களை இம்முறை பிக் பாஸ் வீட்டில் அறிமுகப்படுத்தப் போறாங்க என்பதை ஆரம்பத்திலேயே பிள்ளையார் சுழி போட்டுக் காட்டி உள்ளனர். புதுசா இருந்தா தான் மக்கள் பார்ப்பாங்கன்னு பிக் பாஸுக்கு தெரியாதா பின்ன..

  பந்தை கரெக்ட்டா போடணும்

  பந்தை கரெக்ட்டா போடணும்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் வயசானவங்களை எல்லாம் சீக்கிரமா வெளியேற்றி விட்டு, இளம் போட்டியாளர்களை இறுதி வரை வைத்து இருப்பது வழக்கம். அவங்களுக்குள்ள நடக்குற பிசிக்கல் டாஸ்க்குகளை பார்க்கவே நிறைய ரசிகர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களாகி உள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிசிக்கல் டாஸ்க் ஆரம்பித்து விட்டது. முதல் டாஸ்க்கே பந்தை கரெக்டா பவுல் குள்ள போடணும் என்பது தான்.

  இரண்டு பேர் பார்ட்னர்

  இரண்டு பேர் பார்ட்னர்

  இந்த டாஸ்க்கிற்காக இரண்டு இரண்டு பேர் பார்ட்னர்களாக சேர்ந்துள்ளனர். நல்ல வேளை ரியோவையும், சுரேஷையும் பார்ட்னர்களாக சேர்க்காமல், பாலாஜியையும் சுரேஷையும் பார்ட்னர் ஆக்கி உள்ளனர். ஷிவானி, ஆரி அடுத்த பட ஹீரோயினா சார். ரியோ, நிஷா கடைசி வரைக்கும் குரூப்பிஸம் தான். என்கிற ரேஞ்சுக்கு இன்றைய டாஸ்க் இருக்கப் போவதை புரமோ வீடியோ விளக்கி உள்ளது.

  இதை கவனிச்சீங்களா

  இதை கவனிச்சீங்களா

  இன்றைய புரமோ வீடியோவை நன்றாக உற்றுப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் இது தெளிவாகி இருக்கும், இந்த பந்தை பவுல கரெக்ட்டா போட்டு, எவிக்ஷனில் இருந்து எஸ்கேப் ஆகப் போகிறது யார் என்பது கிட்டத்தட்ட தெளிவாகி உள்ளது. ஒரு ஃபிரேமில் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவர் மட்டுமே கடைசியாக அந்த வளையத்தை சுற்றி வருகின்றனர்.

  இருவரில் யார்

  இருவரில் யார்

  இந்த இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்ற கணிப்புகளும் இப்போதே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. ஜித்தன் ரமேஷை இறுதியாக வீழ்த்தி பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது பார்ட்னரான மொட்டை தல சுரேஷும் அடுத்த வாரம் எவிக்‌ஷனில் இருந்து தப்பிப்பாங்கன்னு தெரியுது.

  திருடப்படுமா

  திருடப்படுமா

  சுரேஷ் சக்கரவர்த்தி சேஃப் ஆகிட்டாருன்னா அவருக்கு அந்த அலாவுதின் பூதம் தேவைப் படாது. ஆஜித்திடம் இருந்து, அதனை வேற யாரோ தான் திருடப் போறாங்க, ஆரி ஆஜீத்துக்காக இறங்கி சண்டை போடுவாரா? இல்லை ஆஜீத், அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறார்? என்கிற ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் நிறைந்த தரமான சம்பவமாக இந்த வாரம் இருக்கும் என்பது உறுதி.

  English summary
  A frame from today 3rd promo of Bigg Boss Tamil 4 reveals the secret who will win and save from eviction process.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X