என்னதான் சோம்பேறியா இருந்தாலும்.. பிசிக்கல் டாஸ்க்குன்னு வந்துட்டா.. பாலாவை அடிச்சிக்க ஆள் இல்லை!
சென்னை: பிசிக்கல் டாஸ்க் என வந்து விட்டால், இறங்கி விளையாடி கலக்குவதில் பாலாஜி முருகதாஸ் எப்பவுமே கில்லாடி தான்.
தூங்குறான், கோவமா கத்துறான், லவ் பண்ணிட்டு சுத்துறான், லக்சரி பட்ஜெட் டாஸ்க்குக்கு வேட்டு வைக்கிறான் என பாலாஜி முருகதாஸ் மேல ஏகப்பட்ட புகார்கள் வந்தாலும், இறங்கி விளையாடுவதில், பாலாவை அடிச்சிக்க ஆள் இல்லை.
நேற்று நடந்த செஞ்சி முடி ஒரு பிடி பிடி டாஸ்கிலும் ஜெயித்து அசத்தினார்.

ஏகப்பட்ட பட்ட பெயர்கள்
வழக்கமா, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ட்ரிகர் சக்தி, வத்திக்குச்சி வனிதா, விஷ பாட்டில் ஜனனி என ஒரு சில பட்டப் பெயர்கள் தான் இருக்கும். ஆனால், இந்த சீசன் போட்டியாளரான பாலாஜி முருகதாசுக்கு சோம்பேறி, தூங்குமூஞ்சி, டுபாக்கூர், காதல் மன்னன், தறுதலை என ஏகப்பட்ட பட்டப் பெயர்கள் வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

லக்சரி பட்ஜெட்டுக்கு வேட்டு
லக்சரி பட்ஜெட் டாஸ்க் வந்து விட்டால், மற்ற போட்டியாளர்களுடன் ஜெல் ஆகி விளையாடாமல், தன் இஷ்டத்துக்கு விளையாடி ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட்டுக்கு வேட்டு வைத்து வருவதையே வாடிக்கையாக்கி உள்ளார். அதனால், சக போட்டியாளர்கள் பாலா மீது செம காண்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிசிக்கல் டாஸ்க்கில் கிங்
லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் சொதப்போ சொதப்புன்னு சொதப்பி ஃபிராடு தனம் பண்ணினாலும், பிசிக்கல் டாஸ்க் என வந்து விட்டால் பிக் பாஸ் வீட்டில் பாலாவை அடித்துக் கொள்ள ஆளில்லை. ரியோவை தூக்கி சுமந்ததில் இருந்து, நேற்று ஜெம்ஸ் மிட்டாயை கீழே விழாமல் சாப்பிட்டது வரைக்கும் அசத்தி வருகிறார் பாலா.
Recommended Video

க்ளோஸ் அப் வேற
பாலாஜி முருகதாஸ் பென்சில் மேல் ஜெம்ஸ் மிட்டாய்களை வைத்து, அதனை நூலால் காதில் கட்டி இழுத்து, மூன்று ஜெம்ஸ் மிட்டாயும் கீழே விழுந்து விடாமல் லாவகமாக அதனை வாய் வரை இழுத்து என சரியாக சொன்ன போதும், தேவையில்லாமல் சுச்சி கலாய்த்து சிரித்தார். மூன்று ஜெம்ஸ் மிட்டாயையும் விழாமல் முதல் முயற்சியிலேயே செஞ்சி முடித்து ஃபலூடாவை ஜெயித்தார். ஆனால், அவ்ளோ க்ளோஸ் அப்லாம் வைக்காதீங்க பிக் பாஸ் பார்க்க சகிக்கல.


Click it and Unblock the Notifications











