பிக்பாஸ் வீட்டில் சுண்டல் விற்ற பயில்வான்.. அர்ச்சனா மாதிரி இல்ல.. ஆர்ட்டிஃபிஷியலா இருந்துச்சு பாஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் சுண்டல் விற்றது கொஞ்சம் கூட எதார்த்தமாக இல்லை என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணி கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸ்களுக்கு ஜிப்ரிஷ் மொழியில் பேசும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

டிவியில் வந்த டெக்ஸ்ட்
அதேபோல் ஹவுஸ்மெட்டுகளுக்கு ஸ்பெஷலாக ஸ்னாக்ஸ் கொடுக்கப்பட்டது. என்ன ஸ்னாக்ஸ் என்பதை சீக்ரெட்டாக வைத்திருந்த பிக்பாஸ் அது தொடர்பான கண்டிஷன்களை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் டிவியில் டெக்ஸ்ட்டாக ஒளிபரப்பினார்

30 செகண்டுக்குள்
அதன்படி 6 மணிக்கு பிக்பாஸ் வீட்டின் ஸ்டோர் ரூமில் ஸ்னாக்ஸ் வைக்கப்படும். அதனை வைத்த 30 செகண்டுக்குள் வீட்டில் இருந்து ஒருவர் வந்து எடுக்க வேண்டும். அதற்காக ஸ்டோர் ரூமின் கதவை பிடித்துக் கொண்டே இருக்கக்கூடாது.

ஓடிப்போன பாலாஜி
ஸ்னாக்ஸை எடுக்கும் நபர் அதனை ஹவுஸ் மெட்டுகளிடம் அந்த ஸ்டைலிலேயே விற்பது போல் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து மாலை 6 மணி ஆனதும் பாலாஜி வேகமாக ஸ்டோர் ரூமூக்குள் ஓடிப்போனார்.

அலுத்துக்கொண்ட பாலாஜி
பின்னாடி சனம் ஷெட்டியும் ஓடிப்போனார். ஆனால் உள்ளே டீ, சுண்டல், டீ கிளாஸுடன் கூடிய ட்ரே இருந்தது. இதனை பார்த்து ரொம்பவே அலுத்துக் கொண்டார் பாலாஜி. எதுக்குய்யா இது எப்படிய்யா விற்பது என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தார்.

அவருக்கு மேல் சோம்
ஆனாலும் ஜாலியாக தொடங்கிய பாலாஜி, சனம் கேட்ட கேள்விக்கு எடக்கு முடக்காக பதில் சொல்லி தவற விட்டுவிட்டார். மேலும் ஹவுஸ்மெட்டுகளிடம் ரொம்பவே ஆர்ட்டிஃபிஷியலாக கடமையே என விற்றார். பேருக்கு ரம்யாவிடம் லவ்வரா என கேட்டு விட்டு கொஞ்சமும் சுவாரசியம் இல்லாமல் செய்தார்.

தேனா இருக்கு..
அர்ச்சனா சுண்டல் விற்றபோது இருந்த சுவாரசியம் கொஞ்சமும் பாலாஜி சுண்டல் விற்றபோது இல்லை என்றார். இதில் பாலாஜிக்கு அசிஸ்ட்டண்ட்டாக இருந்தார் சோம். கையில் டீ ஜக்கை வைத்துக்கொண்டு எப்படி இருக்கு என ரியோவிடம் கேட்டார். அதற்கு தேனா இருக்கு என்றார் ரியோ.


Click it and Unblock the Notifications











