கல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குள்ளான போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ்தான்.

பிக்பாஸ் வீட்டில் கரடு முரடாக நடந்து கொண்டாலும் ரன்னர் அப் ஆகும் அளவுக்கு ரசிகர்களையும் பெற்றார்.

மக்களுக்கு தெரியவேண்டும்

மக்களுக்கு தெரியவேண்டும்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் பாலாஜி முருகதாஸ். அதில் பேசியுள்ள அவர், மக்கள் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் நான் செல்லும் போது மக்களுக்கு என்னை தெரிய வேண்டும் என்றுதான் நினைத்து சென்றேன்.

மாடல்ஸ்க்கு ஸ்டூடியோ

மாடல்ஸ்க்கு ஸ்டூடியோ

நிகழ்ச்சியில் வெளியே வந்த பிறகு மாடல்ஸ்க்கு என ஒரு ஸ்டூடியோ ஆரம்பிக்க வேண்டும், அதற்காக நான் ஃபினான்சியலி ஸ்டேபிளாக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்த வீட்டில் இருந்தது எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. இவ்வளவு அன்பை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்லடி வரும் என்று நினைத்தேன்

கல்லடி வரும் என்று நினைத்தேன்

முரட்டு தனமாக நடந்து கொண்டதால் நிறைய பின்னடைவுகளை பெறுவேன் என்று நினைத்தேன். கல்லடி வரும் என்று நினைத்தேன். ஆனால் அன்பு அடிதான் வந்துள்ளது. நான் நானாக இருந்ததை மக்கள் விரும்பியுள்ளனர். அவர்கள் எனக்கு நல்ல பக்கத்தைப் பார்த்தார்கள். அதுவே ஒரு பெரிய வெற்றி.

ஒரு போதும் நம்பவில்லை

ஒரு போதும் நம்பவில்லை

நிகழ்ச்சியில் ஃபைனல் வரை செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னைப் போன்ற ஆக்ரோஷமான ஒருவரை மக்கள் விரும்புகிறார்களா என்று எனக்கு சந்தேகம் இருந்ததால், நிகழ்ச்சியை வெல்வேன் அல்லது இறுதிப் போட்டிக்கு வருவேன் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை.

நீண்ட நேரம் பேசுவார்..

நீண்ட நேரம் பேசுவார்..

ஆனால் காலப்போக்கில், பலர் என்னைப் பார்த்து என்னைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன். உண்மையான என்னை கவனிக்கும் நபர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன். ஒவ்வொரு வாரமும், கமல் சார் என்னுடன் உரையாடுவார், சில நேரங்களில் நீண்ட நேரம் பேசுவார். கடந்த வாரத்தில், மக்கள் எனக்கு வாக்களித்ததற்காக நான் மகிழ்ச்சியடைந்தேன், இவ்வாறு பாலாஜி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X