நைஸ்ஸா பேசி ஆரியை கோர்த்துவிடும் பாலாஜி.. என்னல்லாம் நடக்கப் போகுதோ.. அடுத்த புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் ஃபன் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பால் கேட்ச் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்க்கில் இரண்டு டீம்களாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடுகின்றனர்.

சண்டை போட்ட ரியோ
இதில் ஆரிக்கும் ரியோவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பேசிய ரியோ இங்க வந்து கேள்வி கேட்பதை விட்டுவிட்டு உங்கள் டீமில் போய் பேசுங்கள் என்று மல்லுக்கட்டினார்.

பாலாஜிக்கும் சோமுக்கும்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் டாஸ்க் விளையாடும் போது பாலாஜிக்கும் சோமுக்கும் இடையில் தகராறு ஏற்படுகிறது. பாலாஜி பாலை பிடிக்கவிடாமல் தன்னை தள்ளிவிடுவதாக குற்றம் சாட்டுகிறார்.

சோமிடம் வாக்குவாதம்
அதற்கு நான் என் கோட்டுக்குள் நிற்கிறேன், என் லைனுக்குள் வந்துவிட்டு நான் தள்ளுகிறேன் என்றால் எப்படி? என் லைனுக்குள் வந்துட்டு என்னை சொல்லாதே என்று கூறி வாக்குவாதம் செய்கிறார் பாலாஜி.

நல்லா விளையாடுறீங்க
இதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் ஆரியிடம் செல்லும் பாலாஜி, நீங்க நல்லா விளையாடுறீங்க, நான் ஃபிரண்ட்ல நிக்கிறேன் பால பிடிக்கிறதுக்கு, நான் போனாதான் இங்க இடிக்கிது அங்க இடிக்கிதுன்னு கம்ப்ளையன்ட் பண்றாங்க என்று கூறுகிறார்.

என்னை டிஸ்டர்ப் பண்ணவா?
அப்போது பேசும் ஆரி, நானும் ரியோவும் நின்னுட்டு இருந்தோம் ஒரு ஸ்ட்ரேட்டர்ஜி யூஸ் பண்ணி, அப்போது முன்னாடி போ முன்னாடி போ என்கிறார், அது என்னை டிஸ்டர்ப் பண்ணவா என்று யாரோ ஒரு போட்டியாளரை கூறுகிறார் ஆரி.

கோர்த்து விடும் பாலாஜி
தொடர்ந்து பேசும் பாலாஜி, எதுக்குடா விளையாடுறோம் என்று ஆகிவிட்டது என்கிறார். இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், ஆரியிடம் மற்ற ஹவுஸ்மேட்ஸ் சண்டை போட வேண்டும் என்பதற்காகவே அவரை கோர்த்து விடுகிறார் என கூறி வருகின்றனர்.

குறை சொல்கிறார்..
ஏற்கனவே ஆரி, மற்றவர்களை மட்டப்படுத்தி தான் தான் நேர்மையான பிளேயர் என காட்டி கொள்கிறார் என்றும் மற்றவர்களை குறை கூறுகிறார் என்றும் சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னார் பாலாஜி.

அவமானப்படுத்திய பாலாஜி
மற்றவர்களை ஆரிக்கு எதிராக தூண்டி விடுவதே பாலாஜிதான். நேற்றைய எபிசோடிலும் ஃபன் டாஸ்க்கில் ஆரிக்கு எதிராக சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் பல கேள்விகளை கேட்டு அவரை டார்கெட் செய்தார். பல நேரங்களில் அவரை அவமானப்படுத்தியுள்ளார் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











