சிவாஜி வீட்டுக்கு ஆப்பு.. பலரிடம் கடன் வாங்கிய ராம்குமார்.. உண்மையை உடைத்த பிரபலம்!
சென்னை: கொடுத்த கடனை திருப்பி வழங்காத காரணத்தினால், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இந்த கடன் விவகாரத்திற்கு பின்னணியில் இருக்கும் பல விஷயத்தை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.
விஷ்ணு விஷால் பிரபலமாவதற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ஜலஜால கில்லாடி. இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிந்து, படத்தின் முதல் காப்பியும் தயாராகி விட்டது. இந்த படத்தினுடைய மொத்த பட்ஜெட் மூன்று கோடி ரூபாய் தான். ஆனால், துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் ஜலஜால கில்லாடி படத்தை மூன்று கோடியில் எடுத்து விட்டு, அந்த படத்தை காட்டி, 13 கோடி ரூபாயை கடன் வாங்கி, ஏற்கனவே இருந்த கடனை அடைத்துள்ளார் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்.

பல இடத்தில் கடன்: தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு இருந்தது. இந்த கடனை திருப்பி தராததால் தனபாக்கியம் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு சிவாஜி வீட்டை ஜப்தி பண்ண ஆர்டர் வாங்கி உள்ளார். அவர் மட்டுமில்லாமல் இன்னும் சில முக்கியமான சினிமா பைனான்சியர்கள், செட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி உரிமம் என பலர் இந்த படத்திற்காக பணம் கொடுத்துள்ளனர். அவர்களும் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்ற ஆர்டருடன் காத்து இருக்கிறார்கள். பூனைக்கு யார் மணிகட்டுவது என இருந்தது அந்த வேலையை தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் செய்துவிட்டது.
ரஜினி உதவினார்: 2005 ஆம் ஆண்டு சிவாஜியின் குடும்ப மிகப்பெரிய ஒரு கடன் சுமையில் சிக்கியது. அனைத்து சொத்துக்களும் கைவிட்டு போகும் நிலைக்கு வந்த போது, ராம்குமார் மற்றும் பிரபு இருவருமே ரஜினிகாந்தை சந்தித்து, குடும்பம் கஷ்டத்தில் இருப்பதை எடுத்துக் கூறி, ஒரு படத்தில் நடித்து கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார்கள். அப்போது, ரஜினி அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு சந்திரமுகி படத்தில் நடித்தார். சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிவாஜியின் குடும்பம் கடனிலிருந்து மீண்டது.
வருமானம் இல்லை: ஆனாலும் அதன் பிறகும் கடனில் சிவாஜியின் குடும்பம் சிக்கி உள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், சிவாஜி சம்பாதித்து சேர்த்து வைத்தது தான் அனைத்து சொத்துக்களும் சிவாஜிக்கு பிறகு பிரபு நடித்து சம்பாதித்தார். ஆனால், பிரபுவுக்கு பிறகு அவரது குடும்பத்தில் இருந்து எந்த வாரிசுகளும் சினிமாவில் பெரிதாக பிரகாசிக்கவில்லை. ஆனால், ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து பழகியவர்களுக்கு இறங்கி வர முடியாததால், கடனை வாங்கி ஆடம்பரமாக குடும்பத்தை நடத்தி வருகின்றனர். சிவாஜி இல்லம் 53 சதுர அடி கொண்ட பெரிய பங்களா, இந்த வீட்டில் தான் சிவாஜியின் மொத்தக்குடும்பமும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
சிவாஜியின் குடும்பம் முன்பு பிரச்சனையில் சிக்கிய போது ரஜினி கைகொடுத்து உதவினார். அதேபோல தற்போது கமல், சரத்குமார் என முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த தொகை பெரிய விஷயம் இல்லை. அவர்கள் நினைத்தால் காப்பாற்றலாம், இந்த முறை சிவாஜியின் குடும்பத்தை யார் காப்பாற்றுபவர்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம் என பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











