ஆரியிடம் வெட்டியாய் வம்பிழுத்த பாலா.. மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு.. வேறலெவல் வில்லத்தனம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரியை வேண்டும் என்றே வம்பிழுத்து மொத்த ஹவுஸ்மெட்ஸையும் தூண்டிவிட்டு குளிர்காய்ந்தார் பாலாஜி.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனல் பறந்தது. நாமினேஷன் புராசஸுக்காக கன்ஃபெஷன் ரூமுக்கு சென்றார் ஆரி.
அப்போது கவுன்ட்டவுன் ஸ்டார்ட் என்று ஜித்தன் ரமேஷ் கமெண்ட்டடித்தார். இதேபோல் ரம்யா மற்றும் சனம் ஷெட்டியும் அவரை கிண்டல் செய்தனர்.

அப்படி சொல்லாதீர்கள்
இதனால் டென்ஷனான ஆரி, இனி மேல் இப்படி சொல்லாதீர்கள், இந்த வீட்டில் யாருமே பேசுவதே இல்லையா என கேட்டார். பின்னர் கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியே வந்த ஆரி, எல்லோரையும் நிற்க வைத்து, என்னை இனிமேல் அப்படி சொல்லாதீர்கள் ஹர்ட்டாகுகிறது என்றார்.

நீங்கள் சொல்வதை செய்யுங்கள்
உடனே மூக்கை நுழைத்த பாலா, நீங்கள் அதைதான் முதலில் செய்கிறீர்கள் என்றார். முதலில் நீங்கள் சொல்வதை நீங்கள் ஃபாலோ பண்ணுங்கள். மற்றவர்கள் சூடான ஆர்க்யூமென்ட் செய்யும் போது நீங்கதான் தப்புன்னு சொல்றத நிறுத்துங்க என்றார். அதற்கு ஆரி என்னப்பா சொன்னேன் சொல் என்றார்.

உங்களுக்கு நேர்மை இல்லை
அப்போது ரியோவுக்கு கேப்டன் டாஸ்க்கை விட்டுக் கொடுத்தேன் என்று சொன்னீங்கள்ல என்று தனியாக இருந்த போது பேசியதை எல்லோருக்கு முன்பும் போட்டுடைத்தார். எதுக்கு கேமரா முன்னாடி சொன்னீர்கள் என்றார். அதோடு விளையாடிய போது நேர்மை இல்லை என்றீர்கள்.

மொத்தமாய் சேர்ந்த ஹவுஸ்மேட்ஸ்
என்னை வண்டை வண்டையாய் கேட்டீர்கள்.. உங்களுக்கு தான் செயலிலும் நேர்மையில்லை வார்த்தையிலும் நேர்மையில்லை என்றார். இதனைக் கேட்ட ரம்யா, சனம் ஷெட்டி, அனிதா சம்பத், அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா என அனைவரும் ஆரியை கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தனர்.

எதிராய் திரும்பிய சனம்
அர்ச்சனா நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் யாரும் விட்டுக்கொடுக்கவில்லை. ரியோ தானாக விளையாடி ஜெயித்தார் என விளக்கம் கொடுத்தனர். ஆரி சொன்ன போதெல்லாம் தலையாட்டிய எனக்கு அந்த டவுட் இருந்தது என்று கூறிய சனம் ஷெட்டி, பிரச்சனையானதும் ஆரிக்கு எதிராக திரும்பினார்.

மட்டமாய் நடந்த ரம்யா
ரம்யாவும் இதுதான் சான்ஸ் என்று ஆரியை கடுமையாக விமர்சித்தார். என் இஷ்டம் என் கேம் நான் விளையாடுவேன் விட்டுக்கொடுப்பேன் நீ ஆஜித்துக்காக விட்டு கொடுக்கவில்லையா என்றார், அதற்கு நான் வெளிப்படையாக சொன்னேன் என்றார். இறுதியாக நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்துவிட்டார் என்று கூறிவிட்டு பதில் சொல்ல முடியாமல் சென்றார் ரம்யா.

வெட்டி வம்பு பாலாஜி
மொத்தத்தில் ஆரியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாலாஜி மொத்த ஹவுஸ்மெட்ஸ் முன்னிலையிலும் அவர் சொன்ன விஷயத்தை சொல்லி வெட்டியாய் வம்பிழுத்தார். தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தில் தலையிட்டு மொத்த பிக்பாஸ் வீட்டையும் ரணகளப்படுத்தி விட்டார் பாலாஜி.


Click it and Unblock the Notifications











