twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளம் சினிமா கலைஞர்களை கண்டறியும் தமிழ் ஸ்டுடியோவின் மாற்று சினிமாவுக்கான முதல் முயற்சி

    |

    சென்னை: தமிழ் ஸ்டுடியோவின் கனவு திட்டங்களில் ஒன்றான தமிழ்நாடு முழுக்க மாற்று சினிமாவிற்கான மையம் அமைக்கும் முயற்சியின் முதல் படியாக விழுப்புரத்தில் வரும் ஞாயிறு மதியம் 2 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழாவையும் மையத்தையும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தொடங்கி வைக்கிறார்.

    இதில் தகுதியுள்ள, திறமையான குறும்பட இயக்குநர்களின் குறும்படங்களும் திரையிடப்படவிருக்கின்றன.

    Balaji Sakthivel is inaugurating an alternative cinema festival at Villupuram

    இந்நிகழ்வில், மேற்கு தொடர்ச்சி மலை பெஸ்டிவல் வெர்சன் திரைப்படம் திரையிடல், பாலுமகேந்திரா விருது விழாவில் கடந்த இரண்டு ஆண்டுகள் முதலிடம் பிடித்த இரண்டு குறும்படங்கள் திரையிடல் என களைகட்டும்.

    அனைவரும் திரண்டு வாருங்கள். அனுமதி இலவசம்.

    விழுப்புரத்தில் - மாற்று சினிமாவிற்கான மையம் தொடக்க விழா.

    03.11.2019 ஞாயிறு மதியம் 2 மணிக்கு,

    மதியம் 2 மணிக்கு: மேற்கு தொடர்ச்சிமலை பெஸ்டிவல் வெர்சன் திரையிடல் (தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக திடையிடல்) | 1:55:23

    மாலை 4 மணிக்கு: மாற்று சினிமாவிற்கான மையம் தொடக்க விழா நிகழ்வு.

    குறும்படம் 1: உள்ளங்கை நெல்லிக்கனி | இயக்கம்: ஹரிஹர சுதன்| (17:07)

    குறும்படம் 2: DESTINASIA | இயக்கம்: கெளரி ஷங்கர் | (28:12)

    சிறப்புரை: பாலாஜி சக்திவேல், திரைப்பட இயக்குனர்.

    ஒருங்கிணைப்பு: மாலைப் பொழுதினிலே வாசகர் வட்டம், பிராக்ஸிஸ் படிப்பகம் மற்றும் தமிழ் ஸ்டுடியோ

    இடம்: பிராக்ஸிஸ் படிப்பகம், எல்லிசத்திரம் சாலை, VGP நகர், புதிய பேருந்து நிலையம் அருகில், விழுப்புரம்-605602
    தொடர்புக்கு 9952534083

    அனைவரும் வருக, அனுமதி இலவசம்.

    அடுத்து மாஸ் காம்போ.. சீயான் விக்ரமை இயக்கும் வெற்றிமாறன்?அடுத்து மாஸ் காம்போ.. சீயான் விக்ரமை இயக்கும் வெற்றிமாறன்?

    இந்நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம், தகுதியும் திறமையும் உள்ள இளம் தலைமுறையினர் அடுத்தடுத்து நல்ல தரமான குறும்படங்களையும், திரைப்படங்களையும் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.

    English summary
    One of the Tamil studio's dream projects, the first phase of an effort to set up a center for alternative cinema in Tamil Nadu, begins at 2 pm on Sunday at Villupuram. Balaji Sakthivel, Director of the festival is inaugurating the event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X