கொட்டுக்காளி கதையையே சொல்லிட்டாரு.. டிரெய்லர் வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்ட பாலாஜி சக்திவேல்!
சென்னை: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியான கூழாங்கல் படத்தை இயக்கிய பி. எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, கல்கி படத்தில் நடித்த அன்ன பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
சிவகார்த்திகேயன் தாடி மீசையுடன் தனது புதிய தோற்றத்தை வெளிக்காட்டியபடி நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் பலர் கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்தின் கதை குறித்து வெளிப்படையாக பேசி படத்தை பாராட்டி உள்ளார். தமிழ் சினிமாவில், இதுவரை இப்படி ஒரு படத்தை தான் பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கொட்டுக்காளி டிரெய்லர் ரிலீஸ்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் இந்த மாதம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லரை தற்போது தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில்: கூழாங்கல் படத்தைத் தொடர்ந்து கொட்டுக்காளி படத்தையும் இயக்கி பி. எஸ். வினோத்ராஜ் சர்வதேச அளவில் பல விருது விழாக்களில் படத்தை திரையிட்டு பாராட்டுகளை பெற்று வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்காக படத்தை திரையரங்குகளில் வெளியிட காத்திருக்கிறார். அதுதொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியாக கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய காதல், வழக்கு எண் 18/9, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் படத்தின் கதை குறித்து கூறியுள்ளார்.
கொட்டுக்காளி கதை: ஹீரோயின் அன்னா பென்னுக்கு பேய் பிடித்து விட்டது என பேயோட்ட ஆட்டோவில் அவரை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் மந்திரவாதியை சந்திக்க செல்லும் போது நடக்கும் அலப்பறைகள் தான் படத்தின் கதை. இதில், உண்மையாகவே யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் கதைதான் இந்த கொட்டுக்காளி. அந்த படத்தை அவ்வளவு எதார்த்தமாக பி.எஸ். வினோத்ராஜ் இயக்கியுள்ளார். அவருக்கு ஏற்றவாறு உலகத் தரமான நடிப்பை சூரி கொடுத்து இருக்கிறார் என படக் குழுவினரையும் பாலாஜி சக்திவேல் பாராட்டியுள்ளார்.

விருதுகளை வெல்லும்: சர்வதேச அளவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், நம் நாட்டிலும் பல விருதுகளை வெல்லும் என பாலாஜி சக்திவேல் பேசியுள்ளார். ஈரானிய படங்களை பார்த்து மிரண்டு போன நிலையில், இப்படியெல்லாம் இங்கே படம் வருமா? என எதிர்பார்த்த நிலையில், அப்படியொரு படைப்பை வினோத் கொடுத்திருக்கிறார். டாப் ஹீரோக்கள் கூட வாழ்நாளில் ஒரு படமாவது உன்னுடன் பண்ண வேண்டும் என ஆசைப்படுவார்கள் என பாலாஜி சக்திவேல் மனதார வாழ்த்தியுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஹேப்பி: சூரியை தனது படங்களில் காமெடியனாக நடிக்க வந்த சிவகார்த்திகேயன் இன்று தனது தயாரிப்பில் சூரியை ஹீரோவாக நடிக்க வைத்து பாராட்டுக்களை பெறும் படைப்பாக இப்படியொரு படத்தை கொடுத்திருப்பதை நினைத்து சிவகார்த்திகேயன் செம ஹேப்பியில் உள்ளார். இந்த ஆண்டு குரங்குப் பெடல் படத்தை தயாரித்து வெளியிட்ட சிவகார்த்திகேயன் அடுத்து கொட்டுக்காளி படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











