மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனி'ல் இணைந்த பிரபல இயக்குனர்.. அக்டோபரில் ஷூட்டிங்?
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல இயக்குனர் புதிதாக இப்போது இணைந்துள்ளார்.
Recommended Video
கல்கியின் புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வனை' சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம்.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது.

ஐஸ்வர்யா ராய்
இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தில், விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட பல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நந்தினியாகவும் மந்தாகினி தேவியாகவும் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி
ஐஸ்வர்யா லட்சுமி, பூங்குழலி கேரக்டரில் நடிக்கிறார். ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் பிரமாண்ட செட் அமைத்து நடந்து வந்தது.

கொரோனா லாக்டவுன்
அடுத்து ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பாலாஜி சக்திவேல்
மத்திய பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கிடையே இதில் புதிதாக நடிகர் நிழல்கள் ரவி சமீபத்தில் இணைந்தார். இப்போது பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேலும் இணைந்துள்ளார். இவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்பட சில படங்களை இயக்கியுள்ள பாலாஜி சக்திவேல் இப்போது படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











