திரும்பிக்கூட பார்க்காத அகிலா ஆன்ட்டி.. தாரை தாரையாய் கண்ணீர்விட்ட பாலாஜி.. அட்வைஸ் கொடுத்த ஆஜித்!

சென்னை: ஷிவானியின் அம்மா தன் முகத்தைக்கூட பார்க்காமல் ரைடு விட்டதை எண்ணி தாரை தாரையாய் கண்ணீர்விட்டார் பாலாஜி.

பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற ஃபிரீஸ் டாஸ்க்கின் போது வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜியுடன் அவர் நெருக்கமாக பழகுவது குறித்து விளாசித்தள்ளினார்.

அவர் கேட்ட கேள்வியும் பேச்சும் ரசிகர்களை கதிகலங்கச் செய்தது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடமும் பேசிய அவர் பாலாஜியை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

ரம்யாவிடம் கேட்ட பாலா

ரம்யாவிடம் கேட்ட பாலா

அருகிலேயே அவர் நின்ற பேதும் அவரை ஏறேடுத்துக் கூட பார்க்கவில்லை ஷிவானியின் அம்மா அகிலா. இதனை தொடர்ந்து என்ன நடந்தது என ரம்யாவிடம் விசாரித்தார் பாலாஜி. அப்போது பேசிய ரம்யா, நிறைய ரியாக்ஷன்ஸ் வெளியே வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

இன்டிவிட்ஜூவலா..

இன்டிவிட்ஜூவலா..

உங்களை எதுவும் சொல்லவில்லை. அவங்களைதான் சொல்லியிருக்காங்க. இன்டிவிட்ஜூவலா நீ ஏன் ஒரு ஒப்பினியனும் எடுத்து வைக்கல? கம்ஃபர்ட் ஸோன்ல இருக்கணும்னா நீ வீட்டிலேயே இருந்திருக்கணும்னு சொல்லியிருக்காங்க என்றார்.

தாரை தாரையாய்

தாரை தாரையாய்

பின்னர் லிவிங் ஏரியாவில் தனியாக அமர்ந்து தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார் பாலாஜி. அப்போது அங்கு வந்த ஆஜித் எல்லாம் ஓகே தானே என்று கேட்க ஓகே என தலையை ஆட்டிய பாலா, அவங்க அம்மாவே வந்து அப்படி பண்ண இப்படி பண்ணனு குறை சொல்லும் போது அதுல நானும் சம்பந்தப் பட்டிருக்கேன்.

பாலாஜி கண்ணீர்

பாலாஜி கண்ணீர்

அது என்னாலதான் என்னும் போது ரொம்ப கில்ட்டியா இருக்கு.. எதுவுமே அவரை கேட்காம பண்ணது ரொம்ப கில்ட்டியா இருக்கு. இப்போதான் கேரியர் ஷைன் ஆகிட்டு வந்தேன். வெளியே எப்படி புரஜெக்ட் ஆயிருக்குன்னு தெரியல. என் முகத்தை கூட பார்க்கல.. ஏன் கிட்ட பேசவே இல்ல.

ஸ்கூல் பொண்ணு மாதிரி

ஸ்கூல் பொண்ணு மாதிரி

என்னை கேட்டிருக்கலாம்... அவங்க அம்மா ஓவர் எதிர்பார்ப்புல வந்திருக்காங்க.. செல்ஃப்லெஸ் யோசிச்சுருக்கணும். உனக்கு இருக்குற விவரம் கூட ஷிவானிக்கு தெரியாது.. ஸ்கூல் பொண்ணு மாதிரி
என்ன நம்பி பேசினாள்.. நம்பிக்கையை உடைச்சுட்டேன்.. என்று கண்ணீர் விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X