போட்டுக்கொடுத்த ஷிவானி.. எவண்டா பத்திரத்த எடுத்தது.. ஆவேசமான பாலாஜி.. அதிர்ந்து போன ஹவுஸ் மெட்ஸ்!

சென்னை: ஷிவானி போட்டுக் கொடுத்ததை கேட்டு பாலாஜி கத்தியதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் மிரண்டு போய்விட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியும் ஷிவானியும் ரொம்பவே க்ளோஸாக உள்ளனர்.

எப்போதும் இருவரும் ஒன்றாகவே பிக்பாஸ் வீட்டுக்குள் சுற்றி வருகின்றனர். மசாஜ், ஊட்டி விடுவது என காதல் ஜோடிகளாய் வலம் வருகின்றனர்.

ஹானஸ்ட்டா பதில் சொல்லு

ஹானஸ்ட்டா பதில் சொல்லு

அப்போதும் இருவரும் ரொமான்ஸ் செய்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் இருவரையும் கழுவி ஊற்றினர். இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் கேபி பாலாவிடம் ஹானஸ்ட்டா பதில் சொல்லு என்று கூறியதை வேற மாதிரியாக அவரிடம் போட்டுக் கொடுத்தார் ஷிவானி.

ஏத்திவிட்ட ஷிவானி

ஏத்திவிட்ட ஷிவானி

பாலாவை கார்டன் ஏரியாவுக்கு அழைத்து சென்று ஷிவானியும் சுச்சியும் ஏத்திவிட்டனர். இதனை கேட்ட பாலா, அப்படியா சொன்னார் என ஆவேசமானார். மேலும் அதேவேகத்தில் உள்ளே சென்று கேபி, ஹானஸ்ட் பத்தி நீ பேசுனீயா என கேட்டு அதட்டினார்.

கேபி பதில்

கேபி பதில்

உன் ஹானஸ்ட்ட பத்தியெல்லாம் நான் பேசல, ஹானஸ்ட்டா பதில் சொல்லுன்னுதான் சொன்னேன். நீ ஒரு நேர்மை இல்லாதவன், பொய் சொல்றவன்லாம் நான் சொல்லல என்றார். இருந்தபோதும் அதனை காதில் போட்டுகொள்ளாத பாலாஜி, என் ஹானஸ்ட்டை பத்தி ஏன் பேசணும் என கத்தினார்.

போடா வாடா என..

போடா வாடா என..

முதலில் பத்திரத்தை எடுத்தவன் எவண்டா? அதை முதலில் சொல்லுங்கடா? வந்துட்டிங்க பழிபோட.. அதை முதலில் சொல்லுங்கள் என படு ஆக்ரோஷமாக கத்தினார். அப்போது முதலில் ஹானஸ்ட்டை பற்றி பேசவில்லை, என்னை மட்டும் ஏன் பேசுகிறீர்கள் என ஆவேசமாக கத்தினார் பாலாஜி.

நான்தான் சொன்னேன்

நான்தான் சொன்னேன்

பாலாஜி கத்தியதை பார்த்த ஹவுஸ்மெட்ஸ் அமைதியாக இருந்தனர். அப்போது அனிதா, இவ்ளோ நேரம் அமைதியா இருந்துட்டு இப்போ வந்து ஏன் பேசுற என்றார் அனிதா. அதற்கு இப்போதான் எனக்கு சொன்னார்கள் என பாலா கூற, ஷிவானி நான் தான் சொன்னேன் என ஆஜரானார்.

ஏத்தி விட்டுள்ளார்கள்

ஏத்தி விட்டுள்ளார்கள்

அவர் போன பிறகு ரியோ பட்டென பாயிண்ட்டை பிடித்தார். முதலில் அமைதியாய் பதில் சொல்லிவிட்டு சென்ற பாலாஜி வெளியே போய்வந்து கத்துகிறார் என்றால், அவரை உடன் இருப்பவர்கள் ஏற்றி விட்டுள்ளார்கள். இதனால் பாலாஜி மீது யாரும் கோபப்பட வேண்டாம் என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X