அதுக்கு கைத்தட்டின கூட்டம்தான நீங்க.. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா.. மல்லுக்கட்டிய பாலா

சென்னை: ரேங்க் டாஸ்க்கின் போது ஹவுஸ்மேட்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி அனைவரையும் சரமாரியாக விளாசி தள்ளினார்.

பிக்பாஸ் வீட்டில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற கால் டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவருக்கான ரேங்க் கொடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது.

இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்க அடித்துக் கொள்ளாத குறையாக சண்டை போட்டனர் ஹவுஸ்மேட்ஸ். ஒன்று முதல் 13 இடங்கள் வரை யார் நிற்பது என்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நின்றுகொண்ட ஹவுஸ்மேட்ஸ்

நின்றுகொண்ட ஹவுஸ்மேட்ஸ்

ஆனால் அதற்கான நேரமும் முடிந்து, எந்த முடிவும் எடுக்கப்படாததால் பிக்பாஸ் அலர்ட் செய்தார். இதனை தொடர்ந்து நம்பர்கள் பொருத்தப்பட்ட பெடஸ்டன்டுகள் முன்பு நின்றுகொண்டனர் ஹவுஸ்மேட்ஸ்.

சுச்சி தீர்ப்பு போல

சுச்சி தீர்ப்பு போல

இதனால் எந்த முடிவும் ஏற்படாமல் பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுச்சி தீர்ப்பு சொன்னதை போல் கைகளை தூக்க சொல்லி அந்த வாக்கெடுப்பு அடிப்படையில் ரேங்க் கொடுக்க முடிவு செய்தனர் ஹவுஸ் மேட்ஸ்.

ஆரிக்கு முதலிடம்

ஆரிக்கு முதலிடம்

இதில் ஆரிக்கு முதலிடத்தை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஹவுஸ்மேட்ஸ் சம்மதிக்க அவர் முதலிடத்தில் நின்றார்.
இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்துக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

மூன்றாவது இடம்

மூன்றாவது இடம்

இதில் அனிதாவும் சனம் ஷெட்டிக்கும் இடையே பேட்டி வர சனம் ஷெட்டி வெற்றி பெற்றார். பின்னர், மூன்றாவது இடத்துக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு ஏற்கனவே பாலாஜி போட்டி போட்ட நிலையில் குறைந்த வாக்குகள் பெற்றார்.

Recommended Video

மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task
கைத் தட்டின கூட்டம்

கைத் தட்டின கூட்டம்

இதனால் கடுப்பான பாலாஜி, வெளியே போய் உட்காந்தார். யார் யாருக்கு என்ன இடம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள், ஃபேவரிட்ஸ்க்கு ஓட்டு போடுங்க என்ற பாலாஜி, நேர்மை தவறி கேப்டன்சி டாஸ்க் விளையாடினப்போ கைத் தட்டின கூட்டம் தான நீங்க என்று அனைவரையும் விளாசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X