திடீரென சனம் பக்கம் சாய்ந்த பாலாஜி.. சுரேஷுக்கு எதிராய் ஆஜராகி சப்பைக்கட்டு.. அதிர்ச்சி புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாய் பாலாஜி மாறியிருப்பது தெரிய வந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் ரொம்பவே சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு இடையே நடக்கும் பிரச்சனையால் பிக்பாஸ் வீடே அதிர்ந்தது.

இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீடு நீதிமன்றத்தை போல் மாற்றப்பட்டு, ஹவுஸ்மெட்ஸ் இடையிலான கருத்து வேறுபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சுரேஷ் புகார் விசாரணை

சுரேஷ் புகார் விசாரணை

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாய் மாறிவிட்டார் பாலாஜி. அதாவது, பிக்பாஸ் கோர்ட்டில் சுரேஷ், சனம் மீது கொடுத்த புகார் விசாரணைக்கு வருகிறது.

தேவையில்லாமல் நடுவில்

தேவையில்லாமல் நடுவில்

அப்போது சனமுடைய ஆதரவாளர்கள் என அழைப்பு விடுக்கிறார் நீதிபதியான சுச்சி. அப்போது முதல் ஆளாய் வந்து நிற்கிறார் பாலாஜி. தொடர்ந்து பேசும் மனுதாரரான சுரேஷ், இருவர் பேசும்போது தேவையில்லாமல் நடுவுல வந்து பேசுகிறார் என்கிறார்.

கொதித்த ஷிவானி

கொதித்த ஷிவானி

அதனைக் கேட்டு சூடாகும் பாலாஜி, நீங்க நடுவுல வந்து பேசக்கூடாதுன்னு சொல்றதே எல்லாரையும் ஸ்டாப் பண்ற மாதிரி இருக்கு என எகிறுகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் ஷிவானி, ஆரி நடுவுல இன்டரெப்ட் ஆனப்போ நீங்க இரிட்டேட்டானீங்க என்று பாலாஜியை குற்றம் சாட்டுகிறார்.

நொந்துப் போன அர்ச்சனா

நொந்துப் போன அர்ச்சனா

தொடர்ந்து கார்டன் ஏரியாவில் பாலாஜி, ஆஜித், ஷிவானி, அர்ச்சனா ஆகியோர் பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது சனம் ஷெட்டிக்கு நீங்க சப்போர்ட்டா பேசுனது, உங்களுகு ஆதரவாய் இருந்த எங்களை முட்டாளாக்கியது என்று பாலாஜியிடம் கூறுகிறார் அர்ச்சனா.

அதுதான் கெத்து..

அதுதான் கெத்து..

அதற்கு பதில் கூறும் பாலாஜி, யார் தோற்குறாங்களோ அவங்களுக்காக நின்னு வின் பண்ணி கொடுக்கிறதுதான் கெத்து என்று கூறி சிரித்தப்படியே நடந்து செல்கிறார். இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.

இன்று சப்போர்ட்

இன்று சப்போர்ட்

நேற்று பாய்ந்து பாய்ந்து சனம் ஷெட்டியுடன் சண்டை போட்டார் பாலாஜி. தறுதலை, அவளே இவளே என்றும் நீ என்ன பெரிய இவளா என்றும் கேட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்படியே மாறி சனம் ஷெட்டிக்கு ஆதரவாக நடந்து நல்லவரை போல் காட்டிக் கொள்கிறார் பாலாஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X