யாருடா இவன்.. சனம் கூட சண்டையும் போடுறான்.. வாதாடியும் ஜெயிக்கிறான்.. பச்சோந்தி பாலா.. புரமோ 3!
சென்னை: அக்டோபர் 4ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, 30வது நாளுக்கான 3வது புரமோவை தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக பிக் பாஸ் வீட்டில், தொடர்ந்து 16 போட்டியாளர்கள் நிரம்பி வழிகின்றனர். ரேகா, வேல்முருகன் இதுவரை வெளியேறி உள்ளனர்.
அர்ச்சனா, சுசித்ரா என இரு பெண் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.
டெலிட் செய்யப்பட்ட முதல் புரமோ
சனம் ஷெட்டி அட்ஜஸ்ட் பண்ணித்தான் அழகிப் பட்டம் வென்றார் என பாலாஜி முருகதாஸ் கூறிய கருத்து முதல் புரமோவில் குற்றச்சாட்டாக எழுந்த நிலையில், அதனை ஜூம் அடித்து ரசிகர்கள் கமெண்ட் அடிக்க, அய்யய்யோ இதை கவனிக்காமல் விட்டு விட்டோமே என பிக் பாஸ் எடிட்டர் அந்த புரமோவை டெலிட் பண்ணிட்டார். ஆனாலும், ஸ்க்ரீன் ஷாட்கள் வைரலாக பரவி வருகின்றன. சீக்கிரமே ஒரு பஞ்சாயத்து இருக்கு.

சனம் பக்கம்
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி, கோர்ட் சீனாக உருவாகி இருக்கிறது. புது வரவான சுசித்ராவை நீதிபதியாக மாற்றி, சுரேஷுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையிலான வழக்கை விசாரிக்கிறார். பாலாவையும், சனம் ஷெட்டியையும் தான் கூண்டில் ஏற்றி இருக்க வேண்டும். இரண்டாவது புரமோவில், அர்ச்சனா அண்ட் கோ முகத்தில் கரி பூசும் விதமாக சனம் பக்கம் பாலா சாய்ந்து வாதாட ஆரம்பித்தார்.

பாலாஜி, ரியோ வாக்குவாதம்
மூன்றாவது புரமோவில் சுரேஷ் தாத்தாவை சப்போர்ட் பண்ணி ரியோவும், சனமை சப்போர்ட் செய்து பாலாவும் வாக்குவாதம் செய்கின்றனர். ரியோ வழக்கம் போல பம்மியே தனது வாதத்தை எடுத்து வைக்கிறார். ஆனால், பாலா தடாலடியாக பேசி சனம் பக்கத்தை வலுவாக்கினார்.

எதிர் தரப்பில் ஷிவானி
பாலாஜி முருகதாஸுக்கு எதிர் தரப்பில் ஷிவானி நாராயணன் நின்று, முதன் முதலாக பாலாஜியை எதிர்த்து பேசியதை இரண்டாவது புரமோவில் பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி ஆகி உள்ளனர். நீ தொடர்ந்து அவனை எதிர்த்து பேசுமா? பாலாஜி நமக்கு வேண்டாம் ஷிவானி, அவன் ரொம்ப மோசம் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

ஆஃப் ஆன அர்ச்சனா
அர்ச்சனா அட்டகாசமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் சுரேஷ் தாத்தா ஆஃப் ஆனார். அதே போல, சுசித்ராவின் என்ட்ரிக்கு பிறகு அர்ச்சனா நேற்றைய எபிசோடில் ஆளே காணோம். பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் அவ்ளோ பெரிய சண்டை நடக்கும் போது அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை. ரியோ தலைவராக இருக்கும் போது அதிகாரம் பண்ண அர்ச்சனா, இப்போ சைலன்ட் ஆகி உள்ளார்.

பச்சோந்தி பாலா
முதல் புரமோவில் சனம் ஷெட்டிக்கும், பாலாவுக்கும் இடையே நடந்த சண்டை வழக்கு கோர்ட்டுக்கு வந்தது. அடுத்த புரமோக்களில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக பாலா, மாறி வெறித்தனமாக வாதாடி சனம் பக்கம் தீர்ப்பை வென்ற நிலையில், பாலாவை சரியான பச்சோந்தி என்று நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











