மன்னிப்பு கேட்குற ஐடியாலாம் இல்ல.. சட்டப்படி பார்த்துக்குறேன்.. கசிந்தது பாலாஜியின் சர்ச்சை ஆடியோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி ஜோ மைக்கேலிடம் பேசிய சர்ச்சை ஆடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் பாலாஜியை சுற்றி வரும் சர்ச்சைகள் ஓய்ந்தப்பாடில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தான் பெற்ற பட்டங்கள் குறித்து பேசினார். அப்போது சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் பெஜன்ட் என்றார்.

பெரும் மோதல்

பெரும் மோதல்

இதற்கு அப்போதே கடும் கண்டனம் தெரிவித்தார் அந்த அழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல். மேலும் இது தொடர்பாக பாலாஜிக்கு சம்மன் அனுப்பினார். இருந்த போதும் இருவருக்கும் இடையில் சமூக வலைதளங்களில் பெரும் மோதல் ஏற்பட்டது.

மறைமுக தாக்குதல்

மறைமுக தாக்குதல்

தன்னுடைய பெஜன்ட்டை பற்றி தவறாக பேசியதற்காக பாலாஜி சட்டப்படி பிரச்சனையை எதிர்கொள்வார் என கூறினார் ஜோ மைக்கேல். ஆனால் குரைக்கும் நாய் கடிக்காது என மறைமுகமாக ஜோ மைக்கேலை தாக்கினார் பாலாஜி.

போன் உரையாடல்

போன் உரையாடல்

மேலும் பாலாஜியின் ரசிகர்களும் ஜோ மைக்கேலை கன்னாபின்னாவென விமர்சித்து வந்தனர். இந்நிலையில் பாலாஜி தன்னிடம் பேசிய போன் உரையாடல் யூட்யூப்பில் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார் ஜோ மைக்கேல்.

டுபாக்கூர் பெஜன்ட்

டுபாக்கூர் பெஜன்ட்

அதன்படி பாலாஜி ஜோ மைக்கேலிடம் போனில் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், தன்னுடைய பெஜன்ட்டை டுபாக்கூர் பெஜன்ட் என்று கூறியது ஏன் என்று கேட்கிறார் ஜோ மைக்கேல். அதற்கு பதில் கூறும் பாலாஜி அன்று என்ன நடந்தது என்பதையும் சனம்மிடம் பேசியது என்ன என்பதையும் விளக்கினார்.

எங்கேயும் யூஸ் பண்ணவில்லை

எங்கேயும் யூஸ் பண்ணவில்லை

அப்போது குறுக்கிடும் ஜோ மைக்கேல், நான் டெலிகாஸ்ட் ஆனதைதான் கேட்கிறேன். நீங்கள் நடத்தியது போன்று டுபாக்கூர் பெஜன்ட் இல்லை என்றீர்களே அதற்கு காரணம் என்ன என கேட்டார். அதற்கு பதில் சொல்லும் பாலாஜி என் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க அதை வைத்துதான் கூறினேன், உங்க பேரை நான் எங்கேயும் யூஸ் பண்ணவில்லை என்கிறார்.

டீஃபேம் பண்ணீட்டிங்க

டீஃபேம் பண்ணீட்டிங்க

அதற்கு பதில் சொல்லும் ஜோ மைக்கேல், பங்கஜ் என்ற நபரின் பெயரை குறிப்பிட்டு, உனக்காக என் காலில் விழுந்திருக்கான். அதனால்தான் பாவம் விட்டு வைத்துள்ளேன் என்கிறார். அப்போது பேசும் பாலாஜி நான் உள்ளே இருக்கும் போது என் பெயரை எவ்ளோ டீஃபேம் பண்ண முடியுமோ அவ்ளோ பண்ணியிருக்கீங்க என்று குற்றம் சாட்டுகிறார்.

உன் ஃபிரண்ட்ஸ்

உன் ஃபிரண்ட்ஸ்

மேலும் என்ன நடந்தது என்று எனக்கு தெரியும், என்ன பேசினேன் என்றும் எனக்கு தெரியும். நான் சட்டப்படி பார்த்து கொள்கிறேன். உங்களிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அப்போது குறுக்கிடும் ஜோ மைக்கேல் என் பெஜன்ட்ட டுபாக்கூர் என்று சொன்ன உன் ஃபிரண்ட்ஸ் யார் என்று கேட்கிறார்.

முடிந்தால் புரூவ் பண்ணு

முடிந்தால் புரூவ் பண்ணு

அதற்கு அதையெல்லாம் இங்கு சொல்ல விரும்பவில்லை என்கிறார் பாலாஜி. அதற்கு என்னுடைய நிறுவனத்திற்கு எதிரான ஆதாராம் இருக்கு என்றாயே அதை புருவ் பண்ண முடிந்தால் புரூவ் பண்ணு. என்னிடம் கூட சொல்ல வேண்டாம் சோஷியல் மீடியாவில் போடு என்கிறார் ஜோ மைக்கேல்.

கேஸ் போடுறதுன்னா போட்டுக்கோங்க

கேஸ் போடுறதுன்னா போட்டுக்கோங்க

இதனால் கடுப்பாகும் பாலா, இதற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. நான் சட்டப்படி எதிர்கொள்கிறேன். என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். என் மேல கேஸ் போடுறதுன்னா போட்டுக்கோங்க. அதோடு விளைவுகளை சந்தித்து கொள்கிறேன். என்ன தேவையோ அதை செய்கிறேன்.

மழுப்பும் பாலாஜி

மழுப்பும் பாலாஜி

அதற்கு பதில் சொல்லும் ஜோ மைக்கேல் மற்றொரு நபரின் பெயரை கூறும் ஜோ மைக்கேல், அவர் எதற்கு என் ஆஃபிஸுக்கு வந்து பேசினார். பாலாஜி வந்து உங்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று ஏன் கூறினார். என்கிறார். அதற்கு என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரியாது என்று மழுப்புகிறார்.

வொர்த் இல்லை..

வொர்த் இல்லை..

மேலும் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் ஐடியாவும் கிடையாது என்று கூறுகிறார். இதனைக் கேட்ட ஜோ மைக்கேல் என் ஆர்கனைஸேஷனுக்கு எதிராக புரூஃப் இருக்கு என்றாயே அதை மட்டும் சோஷியல் மீடியாவில் போடு என்று ஜோ கூற, நீயெல்லாம் நான் கவனிக்கும் அளவுக்கு வொர்த் இல்லை என்கிறார் பாலாஜி.

கெஞ்சி கூப்பிட்டாங்க

கெஞ்சி கூப்பிட்டாங்க

அதற்கு பதில் சொல்லும் ஜோ மைக்கேல், நான் வொர்த் இல்லை அல்லவா, அப்படி இருக்கும் போது நீ ஏன் என் ஈவன்ட்டுக்கு வந்தாய் என்று கேட்கிறார். அதற்கு என்னை கெஞ்சி கூப்டாங்க வந்தேன் என்று பாலாஜி கூறி யார் கெஞ்சி கூப்பிட்டது என்று ஜோ கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாலாஜி நான் சட்டப்படி எதிர்கொள்கிறேன் என்று கூறுகிறார்.

யோவ் என கத்திய பாலாஜி

யோவ் என கத்திய பாலாஜி

ஆரம்பத்தில் மரியாதையாக பேசிய பாலாஜி பின்னர் ஆரியிடம் பிக்பாஸ் வீட்டில் கத்தியதை போல் யோவ் என ஜோவிடம் கத்துகிறார். இப்படியாக உள்ளது பாலாஜி மற்றும் ஜோ மைக்கேல் பேசும் போன் ஆடியோ. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X