twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹவுஸ்மேட்ஸை ஆட்டுக்கல்லில் மாவாட்ட விட்ட பிக்பாஸ்.. அதிலேயும் ஆரியுடன் மல்லுக்கு நின்ற பாலாஜி!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்டுகளை மாவாட்ட விட்டு வடை சுட வைத்தார் பிக்பாஸ்.

    பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் ஸ்பான்சர் நிகழ்ச்சியாக ஏதாவது ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. லெவிஸ்டா காஃபி, ஹேர் ஆயில், உதயம் நெய், டாபர் பேஸ்ட் என இதுவரை பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.

    அந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை! அந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை!

    அந்த வகையில் நேற்றைய எபிசோடில் உதயம் உளுத்தம் பருப்பு மற்றும் இட்லி அரிசிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது.

    தோசை மற்றும் வடை

    தோசை மற்றும் வடை

    அதாவது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இரு அணிகளாக பிரிந்து தோசை மற்றும் வடை செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அதிகமாக தோசை மற்றும் வடை சுடும் டீமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

    2 ஸ்லோகன்..

    2 ஸ்லோகன்..

    மேலும் டாஸ்க்கின் போது ஒவ்வொரு டீம் உதயம் பருப்பை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 2 வரிகளில் ஸ்லோகன் சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் பாலா ரம்யா ரியோ சோம் ஆகியோர் ஒரு அணியாகவும், ஆரி, ஷிவானி, கேபி, ஆஜித் ஆகியோர் ஒரு டீம்மாகவும் இருந்தனர்.

     மாவரைத்த ஹவுஸ்மேட்ஸ்

    மாவரைத்த ஹவுஸ்மேட்ஸ்

    இதில் ஹவுஸ்மேட்ஸ் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து வடை செய்ய வேண்டும். அதன்படி, கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கல்லில் ஷிவானியும் கேபியும் ஒரு அணியாக உளுத்தம் மாவை அரைத்தனர்.

    ஆரியுடன் மல்லுக்கட்டு

    ஆரியுடன் மல்லுக்கட்டு

    இதேபோல் சோம் மற்றும் ரம்யா ஆகியோர் ஒரு அணியாக மாவு அரைத்தனர். இதில் பாலா ரம்யா ரியோ சோம் அணியே அதிக வடைகளையும் தோசையையும் சுட்டு வெற்றி பெற்றனர். அந்த இடத்திலும் ஆரி சொன்னதை கேட்காமல் தோசைக்கல்லில் மற்றொரு தோசைக்கல்லை வைத்து மூடி மூடி தோசை சுட்டு அவரிடம் மல்லுக்கட்டினார் பாலாஜி.

    English summary
    Balaji team wins in Udhayam task. Housemates prepares Vadai with hand made flour.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X