திருடப்பட்ட பத்திரம்.. மொத்தமாய் போடாவாடா என விளாசும் பாலாஜி.. இன்னைக்கு சம்பவம் இருக்கு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் தொடங்கப்பட்டது.
இதில் பாட்டியாக அர்ச்சனா உள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பத்திரத்தை திருடிய மகன்
பாட்டியின் சொத்துக்கு ஆசைப்படுகின்றனர் பிள்ளைகளும் பேரன்களும். இந்நிலையில் இளையமகனான சோம் அவருடைய மனைவி ரம்யா மற்றும் கூட்டாளியான கேபியுடன் சேர்ந்து பத்திரத்தை திருடிவிட்டார்.

முதல் புரமோ
பத்திரத்தை திருடியது யார் என தெரியாமல் தேடி தவிக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி பாலாஜி கவரில் எதையோ ஒளித்து வைக்கிறார்.

என்ன பார்த்த?
அப்போது ரம்யா, கேபி, ஷிவானி ஆகியோர் அதனை பார்த்து விடுகின்றனர். வெளியே செல்லும் ரம்யா, அர்ச்சனா ஷிவானி ஆகியோர் பக்கத்தில் இருக்கும் போது நான் பார்த்தேன் என பாலாஜியிடம் கூறுகிறார். அதற்கு பாலாஜி என்ன பார்த்த என்று கேட்க நீங்க குரூப்பா ஏதோ பண்ணிங்க என்று கூறுகிறார்.

ஆக்ரோஷமான பாலாஜி
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் பாலாஜியிடம், கேபி ஏதையோ கேட்க, நாம எடுக்கும் போது அவங்க பார்த்துட்டாங்கன்னா 4 பேர் சேர்ந்து பண்ணதுல அர்த்தமே இல்லை என ஆக்ரோஷமாக கத்துகிறார் பாலாஜி.

சிரித்து நழுவும் சோம்
மேலும் எவண்டா அந்த பெட்டியிலேருந்து எடுத்தது என்றும் பயங்கரமாக கோபத்தில் கத்துகிறார். அப்போது சோம், நல்லா கத்துங்கடா என்பதை போல் சிரித்து நழுவுகிறார். இப்படியாக உள்ளது பிக்பாஸ் முதல் ப்ரோமோ.


Click it and Unblock the Notifications











