ஏய்.. தறுதலை.. நீ பெரிய இவளா.. செவுள்லேயே 2 விட்ருப்பேன்.. சனம் ஷெட்டியை கேவலமாய் திட்டிய பாலாஜி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியை பாலாஜி முருகதாஸ், தறுதலை என்றும் அவளே இவளே என்றும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் வழக்கம் போல் காலை நேர ஆக்டிவிட்டி நடைபெற்றது.

அப்போது கத்தியே கிளாஸை எப்படி உடைக்க வைப்பது என்பது குறித்து கிளாஸ் எடுத்தார் ஆஜித்.

 நீங்கதான் தறுதலை..

நீங்கதான் தறுதலை..

அந்த நேரத்தில் பாலாஜி, சனம் ஷெட்டியிடம் தறுதலைன்னா என்னன்னு தெரியுமா என்றார். அதற்கு தெரியாது என்று கூறினார் சனம். அதற்கு நீதான் என பதிலளித்தார் பாலாஜி.

 தறுதலைக்கான அர்த்தம்

தறுதலைக்கான அர்த்தம்

இதனை தொடர்ந்து வழக்கம் போல் பணிகள் தொடர்ந்தது. அப்போது, கிட்சன் ஏரியாவுக்கு வந்த சனம் ஷெட்டி தறுதலை என்றால் என்ன என்று சக போட்டியாளர்களிடம் கேட்டார். அதற்கான அர்த்தத்தை சுச்சி, ரம்யா, அனிதா ஆகியோர் கூறினர்.

 பிஹேவிங்கில் காட்டுங்கள்

பிஹேவிங்கில் காட்டுங்கள்

அதன் பிறகு என்னை பாலாஜி தறுதலை என்கிறார். காலையிலேயே அது தேவையா என கேட்டார். மற்றவர்கள் தேவையில்லை என கூற, ஓவர் கான்ஃபிடன்ஸ், உங்களுடைய கான்ஃபிடன்ஸை பிஹேவிங்கிலும் வார்த்தையிலும் காட்டுங்கள் என்றார் சனம்.

 அடிக்க பாய்ந்த பாலாஜி

அடிக்க பாய்ந்த பாலாஜி

இதனால் கடுப்பான பாலாஜி, ஏய் என்னா விட்டா பேசிக்கிட்ட போற என சனம் ஷெட்டியிடம் நெருக்கமாக சென்று அடிப்பது போல் பேசினார். அப்போது ஏன் வார்த்தையை விடுறீங்க.. அறிவில்ல என மீண்டும் கேட்டார் சனம்.

 ஏன் என்னை உதைச்ச?

ஏன் என்னை உதைச்ச?

அதற்கு அவரை அடிப்பது போல செல்லும் பாலாஜி, நேத்து நைட்டு ஏன் என்கிட்ட வந்த? எதுக்கு பேசுன என்கிட்ட? நேற்று இரவு யார் என்னிடம் பேசினது? யார் என்னை பின்னால் உதைத்தது? என திருப்பி திருப்பி அதையே ஆவேசமாக கேட்டார் பாலா.

 அப்போ ஏன் சிரிச்ச..

அப்போ ஏன் சிரிச்ச..

அதற்கு பேச மாட்டேன் என்று சொன்னேன் என கூறிய சனம், நான் உதைத்தது உனக்கு வலிக்கிறது என்றால் அப்போவே சொல்ல வேண்டியதுதானே, அப்போ ஏன் சிரித்துவிட்டு போனாய் என கேட்டார் சனம்.

 கிளாஸுக்கு வர்றேன்

கிளாஸுக்கு வர்றேன்

அதற்கு கொஞ்சமாவது மேனர்ஸோட நடந்துக்கோ என்றார் பாலாஜி. எனக்கு மேனர்ஸ் இல்லப்பா, உங்கக்கிட்ட நான் கிளாஸுக்கு வர்றேன் என நக்கலாய் சொல்லிவிட்டு வெளியே போனார் சனம்.

 செவுல்லேயே 2 விட்ருப்பேன்

செவுல்லேயே 2 விட்ருப்பேன்

அப்போது கிட்சனில் இருந்தவர்களிடம் பேசிய பாலாஜி, அவ என்ன பெரிய இவளா? பேச மாட்டேன்னா போக வேண்டியதுதானே எதுக்கு என்னை உதைச்சா? இதுவே பையனா இருந்தா செவுல்லேயே 2 விட்ருப்பேன் என்றார்.

 நீ பெரிய இவளா?

நீ பெரிய இவளா?

பின்னர் பெட் ரூமில் நடந்ததை ஆரி மற்றும் அனிதாவிடம் கூறிக் கொண்டிருந்தார் சனம். அப்போ, ஏய் தறுதலை என்று அழைத்தப்படியே உள்ளே வந்த பாலாஜி, நீ பெரிய இவளா? கேமரா முன்னாடி வந்து வந்து பேசுற.. என வாய்க்கு வந்தப்படி பேசினார்.

 ஒபினியன் வேண்டாம்

ஒபினியன் வேண்டாம்

அப்போது அனிதா, பாலாஜி நீ பேசுவது தவறு என்றார். அதேபோல் ஆரியும் பாலாஜியை நீ பேசுவது தவறு என்று கூறினார். சனம் உன்னை விட பெரியவர், அவர் வயசுக்காவது மரியாதை கொடு என்றார். இதனால் கடுப்பான பாலா, கையெடுத்து கும்பிட்டு நீங்கள் ஒபினியன் கொடுக்க வேண்டாம் என அசிங்கப்படுத்திவிட்டார்.

 இடுப்பை காட்டிய சனம்

இடுப்பை காட்டிய சனம்

தொடர்ந்து பேசிய சனம், நான் உன்னை உதைச்சதுக்கு, பதிலுக்கு வேணும்னா நீயும் என்னை உதைச்சுக்கோ என்று இடுப்பை காட்டினார் சனம் ஷெட்டி. இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் நீண்டுக் கொண்டே போனது.

 உதைச்சுட்டு முடிப்பா

உதைச்சுட்டு முடிப்பா

நான் உதைத்தால் சும்மா விடுவாங்களா என்றார் பாலாஜி. அதற்கு வாப்பா வந்து உதைச்சுட்டு போ.. உதைச்சுட்டு பிரச்சனையை முடிச்சுடுப்பா என்றார். அதற்கு என்னை வைத்து கன்டென்ட் தேடாதே என்றார் பாலாஜி.

 போய் தொலை

போய் தொலை

உன்னை வைத்து கன்டென்ட் தேட வேண்டிய அவசியம் எனக்கில்லை.. எனக்கு கன்டென்ட்டா பல விஷயம் இருக்கு உனக்கு கேமராதான் பிரச்சனைன்ன நீ வெளியே போ என சனம் சொல்ல.. நீ போய் தொலை என பாலாஜி சொல்ல.. மாறி மாறி எல்லை மீறி பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

 பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

சனம் ஷெட்டிக்கும், பாலாஜிக்கும் நடந்த சண்டையால் பிக்பாஸ் வீடே அல்லோகளப்பட்டது. கிட்சன் ஏரியாவில் நடந்த சண்டையே பதற வைத்த நிலையில் பெட் ரூமிலும் சனம் ஷெட்டியும் பாலாஜியும் மோதிக் கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X