அவன் இவன்ல்லாம் பேசாதீங்க.. கொடுக்க வேண்டிய மரியாதைய கொடுங்க.. ஒரு முடிவோடதான் இருக்காருய்யா பாலா!

சென்னை: பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளிடம் தன்னை அவன் இவன் என்றெல்லாம் பேசக்கூடாது என பாலாஜி தடாலடியாக கூறியது பகீர் கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ், சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கோபப்படும் நபராக உள்ளார்.

யாருடைய வயதுக்கும் மரியாதை கொடுக்காமல் ரொம்பவே அடாவடியாக நடந்து கொள்கிறார். யாரையும் மதிக்காமல் கொள்ளாடமல் தன் இஷ்டத்துக்கு நடந்து வருகிறார்.

குழந்தை என்று சொல்லக்கூடாது

குழந்தை என்று சொல்லக்கூடாது

பட்டி மன்றம் டாஸ்க்கின் போது அர்ச்சனா தன்னை குழந்தையை என்று கூறியதால் கோபமடைந்தார். நடுவராக இருந்த அர்ச்சனாவை உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று கூறி சாடினார். தன்னை குழந்தை என்று சொல்லக்கூடாது என்றும் எகிறினார்.

டைனிங் டேபிளில்

டைனிங் டேபிளில்

இதேபோல் வேல்முருகனிடமும் ரொம்பவே மோசமாக நடந்து வருகிறார். பலரையும் காயப்படுத்தும் வகையிலேயே பேசி வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அவன் இவன்ல்லாம் பேசாதீங்க

அவன் இவன்ல்லாம் பேசாதீங்க

அப்போது அங்க வந்த பாலாஜி என்னை வெளியில் இருந்து தெரிந்தவர்கள் என்னுடன் க்ளோஸாக இருந்தவர்கள் மட்டும் என்னை அவன் இவன் என்று அழைக்க வேண்டாம். என் பெயரை சொல்லி அழையுங்கள் என்றார்.

ஆபத்தான ஆளுதான்

ஆபத்தான ஆளுதான்

பாலாஜி இப்படி பேசியதை ஹவுஸ்மேட்ஸ் விரும்பவில்லை. நிஷா மற்றும் வேல்முருகன் இதுகுறித்து லிவிங் ஏரியாவில் அமர்ந்து விவாதித்தனர். அப்போது கோபம் வந்தால் அடித்து விடுவார் போல, ஆபத்தான ஆளுதான் பாலா என்றார் வேல்முருகன்.

ரியோ கருத்து

ரியோ கருத்து

நிஷா அவன் இவன் என்று பேச வேண்டாம் என என்னைதான் சொல்கிறான், நான் தான் அப்படி பேசினேன் என்றார். அப்போது அங்கு வந்த ரியோவும் எல்லாரையும் தான் பாலாஜி அப்படி சொன்னதாக கூறினார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

கமல் கொடுத்த டிக் அன்ட் கிராஸ் டாஸ்க்கின் போதும் நிஷா, அர்ச்சனா, ரியோ உள்ளிட்டோர் அதனை முன்வைத்து அவருக்கு க்ராஸ் மார்க் கொடுத்தனர். ஏற்கனவே ரூடாக பழகி வரும் பாலாஜி, இப்படி அடித்துவிட்டிருப்பது ஹவுஸ்மேட்ஸ்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அச்சத்தில் தான் அப்படி

அச்சத்தில் தான் அப்படி

ஆனால் கமலிடம் இதுகுறித்து விளக்கம் அளித்த பாலாஜி, தன்னையும் ஆஜித்தை போல் சின்ன பையன் என ஓரங்கட்டி விடுவார்களோ என்ற அச்சத்தில்தான் தான் அப்படி சொன்னதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X